Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 25 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு முதலீடும் செய்வதைத் தவிர்க்கவும்...
- News
குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள எகிப்து அதிபர் அல் சிசி வருகை! டெல்லியில் உற்சாக வரவேற்பு
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Automobiles
டொயோட்டாவுக்கு ஏழரை சனி! காரை நம்பி வாங்கியவர்கள் அதிர்ச்சி! பிரச்னைக்கு மேல பிரச்னையா வந்துகிட்டு இருக்கு!
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
கனெக்ட் படம் பார்த்து கன்பியூஸ் ஆன நயன்தாரா... அதுக்காக செல்போனை கூடவா மறப்பீங்க?
சென்னை: நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் வரும் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பிரீமியர் ஷோவில் நயன்-விக்கி தம்பதியினர் ஜோடியாக கலந்துகொண்டனர்.
கனெக்ட் பிரீமியர் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயனுக்கு ரசிகர் ஒருவர் ஐ லவ் யூ சொன்னது வைரலான நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் ட்ரெண்டாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் கூட இருக்கும் போதே.. 'ஐ லவ் யூ நயன்தாரா’ சொன்ன ரசிகர்கள்.. என்ன ரியாக்ஷன் தெரியுமா?

ஹாரர் ஜானருக்கு சென்ற நயன்
விக்னேஷ் சிவனுடன் திருமணம், இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மா, ஷாருக்கானுடன் பாலிவுட்டில் என்ட்ரி என பிஸியாக இருக்கிறார் நயன். இந்நிலையில், அவர் நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் வரும் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள கனெக்ட் படத்தின் பிரீமியர் ஷோ நேற்று சென்னையில் திரையிடப்பட்டது. இதில், நயன் - விக்கி தம்பதியினர் ஜோடியாக கலந்துகொண்டனர்.

பிரேக் விட்ட நயன் - விக்கி
99 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்தப் படத்தில் நயன்தாராவுடன் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ஆகியோர் நடித்துள்ளனர். கொரோனா ஊரடங்கின் போது நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. ஹாரர் படம் என்பதால், இடைவேளை இல்லாமல் உருவானது கனெக்ட். ஆனால், இண்டர்வெல் பிரேக் இருந்தால் தான் கனெக்ட் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவோம் என, திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால் வேறு வழியே இல்லாமல் பிரேக் விட்டனர் விக்கி - நயன் ஜோடி. இதனையடுத்து கனெக்ட் திரைப்படம் வரும் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கன்பியூஸான நயன்
இந்நிலையில், நேற்று நடைபெற்ற கனெக்ட் பிரீமியர் ஷோவில் விக்கியும் நயனும் ஜோடியாக கலந்துகொண்டனர். அப்போது விக்னேஷ் சிவனை வைத்துக் கொண்டே நயனிடம் 'ஐ லவ் யூ' மேடம் எனக் கூறினார் ரசிகர் ஒருவர். இதனால் அந்தக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து இருவரும் ஜோடியாக படம் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர். அப்போது விக்கி - நயன் இருவரையும் சூழ்ந்துகொண்ட பத்திரிகையாளர்கள், அவர்களை புகைப்படம் எடுத்து தள்ளினர். இந்த போட்டோஸ் எல்லாம் இணையத்தில் வைரலாகின. அதேநேரம் கனெக்ட் படம் பார்த்து கன்பியூஸ் ஆன நயன், தனது செல்போனை மறந்துவிட்டார் போல.

நயனுக்காக பறந்து வந்த செல்போன்
செல்போனை மறந்து திரையரங்கிலேயே வைத்துவிட்டது கூட தெரியாமல் காரில் ஏறிவிட்டார் நயன். ஆனால், நயனின் செல்போனை பவுன்சர் ஒருவர் எடுத்துக்கொண்டு காரை நோக்கி வேகமாக ஓடிச் செல்கிறார். அதன்பிறகு அந்த செல்போனை நயனிடம் கொடுக்கவும், அவர் அதனை க்யூட்டாக வாங்கிக் கொண்டார். இதனையடுத்து நயன் - விக்கியின் கார் அங்கிருந்து கிளம்பிச் சென்றது. இந்த வீடியோவும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கதை இதுதானாம்?
இதனிடையே கனெக்ட் திரைப்படம் குறித்து நெகட்டிவான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அப்பா சத்யராஜ் கணவர் வினய், மகள் ஹனியாவுடன் வாழ்ந்து வருகிறார் நயன். அப்போது 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு வர, அவர்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி விடுகின்றனர். ஆனால், மருத்துவரான வினய் கொரோனாவால் இறந்து விடுகிறார். தந்தை இழந்த சோகத்தில் இருக்கும் ஹனியா, மந்திரத்தின் மூலம் வினய்யுடன் பேச முயற்சிக்கிறார், அப்போது எதிர்பாராத விதமாக ஒரு கெட்ட ஆவி அவர் உடம்புக்குள் புகுந்து விட அதன்பின் என்ன ஆனது என்பது தான் கனெக்ட் படத்தின் கதையாம். இந்தப் படம் நயனுக்கு ஹிட் கொடுக்குமா என்பது ரசிகர்களின் கைகளில் தான் உள்ளதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.