twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயன்தாராவோட த்ரில்லர் படம்... வெளியாகி 5 வருஷம் ஆயிடுச்சா? கொண்டாட்டத்தில் படக்குழு!

    |

    சென்னை : நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 2017 மார்ச் 31ம் தேதி வெளியான படம் டோரா. இந்தப் படம் கண்டிப்பாக நயன்தாராவின் குட்புக்கில் இடம்பெற வேண்டிய படம்தான். மிகச்சிறந்த திரைக்கதையுடன் ரசிகர்களை மிரட்டியது இந்தப் படம். படம் பார்த்தவர்களுக்கு வித்தியாசமான கதைக்களத்தை கொடுத்தது.

    சிவகார்த்திகேயனால் எனக்குத் தான் 20 கோடி நஷ்டம்.. ஒரே போடு போட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா! சிவகார்த்திகேயனால் எனக்குத் தான் 20 கோடி நஷ்டம்.. ஒரே போடு போட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!

    நயன்தாராவின் டோரா படம்

    நயன்தாராவின் டோரா படம்

    நயன்தாரா, ஹரீஷ் உத்தமன், தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2017ல் வெளியானது டோரா. வித்தியாசமான கதைக்களத்துடன் இந்தப் படத்தை எடுத்திருந்தார் இயக்குநர் தாஸ் ராமசாமி. வழக்கமான பேய் கதைதான் என்றாலும் அதில் வித்தியாசத்தை புகுத்தியிருந்தார் இயக்குநர்.

    கார் மீது பேய்

    கார் மீது பேய்

    படத்தில் பேயாக ஒரு நாய் இருந்தது. மேலும் அது சாதாரண மனிதர்கள் மீது ஏறாமல் ஒரு கார் மீது ஏறி பழிவாங்குவதாக கதைக்களம் இருந்தது. மகள் நயன்தாராவுடன் குலதெய்வம் கோயிலுக்கு போக தன்னுடைய பணக்கார தங்கையிடம் கார் கேட்கிறார் தம்பி ராமையா. ஆனால் அவர் அவமானப்படுத்துகிறார்.

    டோரா படத்தின் கதை

    டோரா படத்தின் கதை

    இதையடுத்து கால் டாக்சி பிசினஸ் ஆரம்பிக்க ஆசைப்பட்டு ஒரு பழைய ஆஸ்டின் காரை வாங்குகிறார். அந்த காருக்கு கிடைக்கும் கொடைக்கானல் ட்ரிப்பின்போது ஏற்படும் அசம்பாவிதங்களும் அதிலிருந்து நயன்தாரா மற்றும் தம்பி ராமையா மீள்வதும்தான் டோரா படத்தின் கதை.

    விவேக் மெர்வின் இசை

    விவேக் மெர்வின் இசை

    காருக்குள் இருக்கும் நாயின் ஆவி யாரை பழி வாங்குகிறது. இந்த பிரச்சினையிலிருந்து நயன்தாரா எப்படி மீள்கிறார் என்பதாக டோரா படத்தின் கதை செல்லும். விவேக் மெர்வின் இசையில் படத்தின் பின்னணி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. ஏ சற்குணம் படத்தை தயாரித்திருந்தார்.

    ரோடில் உருண்டு புரண்ட நயன்தாரா

    ரோடில் உருண்டு புரண்ட நயன்தாரா

    இந்தப் படத்தில் நடித்த நயன்தாரா எந்தவித பந்தாவும் காண்பிக்காமல் சிறப்பாக நடித்ததாக முன்னதாக படத்தின் இயக்குநர் தாஸ் ராமசாமி தெரிவித்திருந்தார். படத்திற்காக ரோட்டில் புரண்டு உருள வேண்டும் என்று அவர் கேட்டபோது உடனடியாக இயல்பாக நடித்து கொடுத்ததாகவும் அவர் புகழ்ந்திருந்தார்.

    English summary
    Dora movie team celebrates the 5 years completion of the movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X