ஓடிடி.,யில் ஒளிபரப்பாகும் நயன்தாராவின் திருமணம்...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சென்னை : நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண நிகழ்ச்சி ஓடிடி.,யில் ஒளிபரப்பாக உள்ளது ஏறக்குறைய உறுதியாகி விட்டதால் இவர்களின் திருமணத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.
நடிகை நயன்தாரா- டைரக்டர் விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ரிசார்ட்டில் நடைபெற உள்ளது. அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை முகூர்த்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் திருப்பதியில் நடைபெறுவதாக கூறப்பட்ட இவர்களின் திருமணம் பிறகு மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டது.

நயன்தாரா திருமணத்தில் ரஜினி, விஜய்
இவர்களின் திருமணத்திற்கு 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர். விவிஐபி.,க்களாக 30 பேர் அழைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பட்டியலில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரும் இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னையில் திருமண வரவேற்பு
திருமணத்திற்கு முன் ஜுன் 8 ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நடத்தப்பட உள்ளதாகவும், இதில் திரை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் நடக்க உள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண வரவேற்பிற்கான ஏற்பாடுகளும், திருமணத்திற்கான ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

முதல்வருக்கு நேரில் அழைப்பு
இதற்கிடையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி தங்களின் திருமண அழைப்பிதழை வழங்கி, நேரில் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பான போட்டோக்கள் வெளியாகி செம டிரெண்ட் ஆகின.

ஓடிடியில் நயன்தாரா திருமணம்
லேட்டஸ்ட் தகவலாக, நயன்தாராவின் திருமண நிகழ்ச்சி பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பெரிய தொகைக்கு திருமண ஒளிபரப்பு உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தை டைரக்டர் கெளதம் மேனன் தான் இயக்க போகிறார். ஆனால் இந்த திருமண நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறதா, இல்லையா என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications











