»   »  நயன்தாரா... வில் பவரை விட்டுக்கொடுக்காத வித்தகி! #HBDNayanthara

நயன்தாரா... வில் பவரை விட்டுக்கொடுக்காத வித்தகி! #HBDNayanthara

Posted By:
Subscribe to Oneindia Tamil
நயன்தாரா... வில் பவரை விட்டுக்கொடுக்காத வித்தகி! - வீடியோ

அறம் படத்தில் ஒரு காட்சி... போர்வெல்லில் விழுந்து போராடிக்கொண்டிருக்கும் குழந்தையை எவ்வளவு நேரத்துக்குள் காப்பாற்ற வேண்டும்...? என்று ஆட்சியராக இருக்கும் நயன்தாரா கேட்க, அதிகாரி, "குழந்தைக்கு வில்பவர் நல்லாருக்கு. நல்லா தைரியமா முழிச்சு பார்த்துட்டு இருக்கா... அதனால இன்னும் ஆறுலேர்ந்து ஏழு மணி நேரம் தாக்குப் பிடிப்பா..," என்பார்.

முதலில் 36 அடியில் இருந்து மீண்டு மேலே வரும் நிலையில் கை பிடி நழுவி மீண்டும் அதல பாதாளத்துக்கே சென்று 96 அடியில் இருக்கும்போதும் வில் பவரை விட்டுக்கொடுக்காத அந்த குழந்தையின் திடத்தை இன்னும் ஒருவரிடம் நாம் பார்க்கலாம். அது நயன்தாரா...!

சாதித்தவர்

சாதித்தவர்

நயன்தாராவைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றையும் படித்துவிட்டு கடைசியில் ஓவரா இருக்கு என்று நீங்கள் கமெண்ட் போடலாம். ஆனால் சொல்வதைத் தாண்டியும் சாதித்திருக்கிறார், சாதித்துக் காட்டிக்கொண்டிருக்கிறார்.

லேடி சூப்பர் ஸ்டார்

லேடி சூப்பர் ஸ்டார்

சென்ற பிறந்தநாளுக்கே 'லேடி சூப்பர் ஸ்டார்' என அவரைக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் அதன் பின் ரிலீஸான நயனின் டோரா படம் பலத்த அடி வாங்கியதோடு நயனின் மார்க்கெட்டையும் அசைத்துப் பார்த்தது.

ரஜினியும் நயனும்

ரஜினியும் நயனும்

யானை சரிந்தால் என்ன நிலைக்கு ஆகும்? அதே நிலைதான். நயன் அவ்வளவுதான்... இனி விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொள்வார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொள்வார் என்று எழுதின மீடியாக்கள். இதோ மீண்டும் அறம் மூலம் நம்பர் ஒன் அரியணையை மீண்டும் கைப்பற்றியிருக்கிறார். டோரா மூலம் நயன் சரிந்தாலும் கூட அந்த அரியணை நயன் வரும் வரை காலியாகத்தான் இருந்தது. இது தமிழ் சினிமாவில் இதற்கு முன் ஒரே ஒருவருக்குத்தான் சாத்தியம். அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நயன் சீதையா?

நயன் சீதையா?


பொதுவாக விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் அடுத்த முயற்சியில் கவனம் செலுத்தினால் மட்டுமே சினிமா மற்றும் அரசியலில் முன்னேற முடியும். அதற்கு சிறந்த உதாரணங்கள் ரஜினியும் நயன்தாராவும்.

நயன்தாரா சீதையாக நடிக்கப்போகிறார் என்றதுமே பயங்கர எதிர்ப்புகள் தோன்றின. அத்தனையும் நயனின் ஒழுக்கத்தை முன்வைத்த எதிர்ப்புகள். இன்னொரு பெண்ணாக இருந்தால் முடங்கிப்போயிருப்பார். ஆனல நயனோ அந்த வேடத்தில் சிறப்பாக நடித்து விருதுகளைக் குவித்து எதிர்ப்புகளுக்கு பதில் கொடுத்தார்.

நயனின் அக்கறை

நயனின் அக்கறை


அறம் படத்தை பொறுத்தவரை நயனும் அதில் ஒரு கேரக்டர் அவ்வளவுதான். முதல் பாதி முழுக்க ராமச்சந்திரனின் குடும்பத்தின் ஆதிக்கம்தான். ஆனாலும் கூட இந்தக் கதையை சிதைக்காமல் எடுக்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் நயன் காட்டிய அக்கறைதான் அறம் படத்தின் மாபெரும் வெற்றி...!

இன்னொரு நாயகியாக இருந்திருந்தால் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்... நயன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நன்கு யோசித்து எடுத்து வைப்பது புரிகிறது.

ரசிகர்களின் 'தலைவி'க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

English summary
Actress Nayanthara's core strength is her will power and professionalism.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil