மற்றொரு சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேருகிறாரா நயன்தாரா ?

மும்பை : தென்னிந்தியாவின் டாப் ஹீரோயின்களில் ஒருவர் நயன்தாரா. கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என பெயர் வாங்கிய இவர், கடந்த 10 ஆண்டுகளாக தனது டாப் ஸ்டேட்டசை தக்கவைத்து வருகிறார்.

தற்போது அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது நயன்தாரா தான். லேட்டஸ்டாக பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் பல படங்களில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் நயன்தாரா.

ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா

ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா

ரஜினி, விஜய், அஜித், சூர்யா என தமிழில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா, இப்போது பாலிவுட்டிலும் கலக்க போகிறாராம். லேட்டஸ்ட் தகவலாக இந்திய சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் ஷாருக்கானுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறாராம் நயன்தாரா.

அட்லீ - ஷாருக் கூட்டணியில் இணையும் நயன்

அட்லீ - ஷாருக் கூட்டணியில் இணையும் நயன்

இந்தியில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்க போகும் படத்தில் தான் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க போகிறாராம். இந்த படத்தில் நடிப்பதற்கு முதல் சாய்ஸாக நயன்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளாராம். அவர் மறுக்கும் பட்சத்தில் வேறு யாரை நடிக்க வைக்கலாம் என ஆலோசனையும் நடந்து வருகிறதாம்.

நயன்தாராவை 2 முறை இயக்கிய அட்லீ

நயன்தாராவை 2 முறை இயக்கிய அட்லீ

அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் நயன்தாராவின் திரைப்பயணத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்த ஆர்யா தான் நயன்தாராவிற்கு ஜோடியாக நடித்திருப்பார். அதற்கு பிறகு அட்லீ இயக்கிய பிகில் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா.

Recommended Video

Mookuthi Amman கதை எந்த படத்தோட தழுவல் தெரியுமா? | Nayanthara, RJ Balaji
அட்லீக்கு ஓகே சொல்வாரா நயன்தாரா

அட்லீக்கு ஓகே சொல்வாரா நயன்தாரா

அட்லீ - நயன்தாரா இடையேயான நட்பு தொடர்ந்து வெற்றி அடைந்து வருவதால் இந்த படத்திலும் நடிக்க நயன்தாரா ஓகே சொல்வார் என்றே கூறப்படுகிறது. அப்படி நயன்தாரா ஓகே சொல்லும் பட்சத்தில் இன்னும் சில ஆண்டுகளுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை நயன்தாரா தக்கவைத்துக் கொள்வார்.

பிஸியான நயன்தாரா

பிஸியான நயன்தாரா

நயன்தாரா தற்போது பல படங்களில் நடிக்க புக்காகி பிஸியாக உள்ளார். இதற்கிடையில் ஷாருக்கான் படத்திற்கும் அவர் ஓகே சொல்லி விட்டால், விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X