நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண கொண்டாட்டம் துவங்கியாச்சு...ஆரம்பமே அசத்துதே

சென்னை : நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண கொண்டாட்டாங்கள் துவங்கி விட்டனவாம். இதனால் போட்டோக்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

ரசிகர்களும், ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதியான நாளை நடைபெற உள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இவர்களின் திருமண ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இவங்க கண்டிப்பா வராங்க

இவங்க கண்டிப்பா வராங்க

இந்த திருமண விழாவில் இருவரின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் என 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட 30 விவிஐபி.,க்கள் கலந்து கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினி, அஜித் நிச்சயம் கலந்து கொள்ள உள்ளதாக நயன்தாரா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Recommended Video

Nayan-Wikki திருமணம் , புதிய Update கொடுத்த Vignesh Shivan *Celebrity |Filmibeat Tamil
இந்து முறைப்படி நயன்தாரா திருமணம்

இந்து முறைப்படி நயன்தாரா திருமணம்

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை அழைத்து, தங்களின் திருமணம் பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விக்னேஷ் சிவன். தங்களின் திருமணம் இந்து முறைப்படி நடைபெற உள்ளதாகவும், திருமணம் முடிந்ததும் ஜுன் 9 ம் தேதி பிற்பகலில் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் திருமண போட்டோக்கள் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

திருமண கொண்டாட்டம் துவங்கியது

திருமண கொண்டாட்டம் துவங்கியது

இந்நிலையில் திருமண சடங்குகள் நேற்று இரவு துவங்கி நடந்து வருகிறதாம். முதல் நிகழ்வாக நயன்தாராவின் மெஹந்தி நிகழ்ச்சியுடன் நேற்று இரவு விழா தொடங்கியுள்ளது. அந்த விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

தண்ணீர் பாட்டிலில் மணமக்கள் போட்டோ

தண்ணீர் பாட்டிலில் மணமக்கள் போட்டோ

அதேபோல் வந்தவர்களுக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் புகைப்பட ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாட்டிலிலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் வெவ்வேறு புகைப்படங்கள் ஒட்டபட்டிருந்திருக்கிறது. இதன் போட்டோக்கள் தற்போது வெளியாகி செம டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X