என்னது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை நான் இயக்குறேனா...கெளதம் மேனன் சொன்ன தகவல்

சென்னை : நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணத்தை பிரபல டைரக்டர் கெளதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இது உண்மையா, இல்லையா என கெளதம் மேனனே விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

பிரம்மாண்டமாக நடைபெற்ற Nayanthara – Vignesh Shivan திருமணம்! #Celebrity | Filmibeat Tamil

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது. மிக பிரம்மாண்டமாக, அதிக எதிர்பார்ப்புக்களுடன் இவர்களின் திருமணம் நடைபெறுகிறது. இவர்களின் திருமணம் தொடர்பான ஒரு போட்டோவாவது வெளியே வந்து விடாதா என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்.

இதற்கிடையில் பிரபல டைரக்டர் கெளதம் மேனன், நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணத்தை இயக்குகிறார், இதற்காக மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, மிக பிரம்மாண்டமாக ஒத்திகை நடைபெற்றதாக சமீபத்தில் மீடியாக்களில் தகவல் வெளியானது.

திருமணத்தை இயக்குகிறாரா கெளதம் மேனன்

திருமணத்தை இயக்குகிறாரா கெளதம் மேனன்

நேற்று இரவு முதல் கெளதம் மேனன் திருமண நிகழ்வுகளை இயக்கி வருவதாக கூறப்பட்ட நிலையில், அந்த தகவல் உண்மையில்லை என தற்போது கெளதம் மேனன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாராவின் திருமணத்தை ஆவணப்படமாக மட்டுமே கெளதம் மேனன் இயக்கி வருகிறாராம். பிரபல ஓடிடி தளம் ஒன்றிற்காக கெளதம் மேனன் இந்த ஆவண படத்தை இயக்குகிறாராம்.

அப்போ இது தான் உண்மையா

அப்போ இது தான் உண்மையா

அதுவும் இந்த ஆவண படம் என்பது நயன்தாராவின் திருமண வைபவம் கிடையாதாம். திருமணம் முடிந்த பிறகே இந்த ஆவண படத்திற்கான ஷுட்டிங் நடைபெற உள்ளதாம். பலருக்கும் நயன்தாராவின் வாழ்க்கை எப்படி முன்னுதாரணம் என்பதை பற்றி தான் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட உள்ளதாம். நயன்தாராவின் ஆரம்ப கால வாழ்க்கை முதல் தற்போது வரையிலான நிகழ்வுகள் தான் இந்த ஆவண படத்தில் இடம்பெற போகிறதாம்.

நெட்ஃபிளிக்சில் நயன்தாரா திருமணம்

நெட்ஃபிளிக்சில் நயன்தாரா திருமணம்

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிரஞ்சீவி, ஷாருக்கான் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்கள் கலந்து கொள்வதால் இவர்களின் திருமண வீடியோக்களை பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. இதனால் திருமணம் தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் ஏதும் லீக் ஆகி விடாமல் இருக்கத்தான் திருமணத்திற்கு வருபவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கேட்கும் போதே பார்க்க ஆசை வருதே

கேட்கும் போதே பார்க்க ஆசை வருதே

அதிகம் எதிர்பார்க்கப்படும் திருமணமான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் மொபைல் போன் கொண்டு வர, போட்டோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. Security code, dress code உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வருபவர்கள் வெளிர் நிறத்தில் தான் உடை அணிய வேண்டும், பாரம்பரிய உடையில் வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கடற்கரையில் கண்ணாடியால் ஆன மணமேடை, பூக்களால் அலங்காரம் என நயன்தாராவின் திருமணத்தில் ஒவ்வொன்றும் ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் தூண்டி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X