நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்...காலை 8.30 மணிக்கு முகூர்த்தம்

சென்னை : விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்தை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. அந்த திருமணம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நாளை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. நேற்று இரவு மெஹந்தி வைபவம் நடைபெற்றுள்ளது. இதில் 100 க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். திருமணத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

எத்தனை மணிக்கு திருமணம்

எத்தனை மணிக்கு திருமணம்

ஜுன் 9 ம் தேதி காலை 8.30 மணி முகூர்த்தத்தில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்ட போகிறார். முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மிக பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Recommended Video

Nayan-Wikki திருமணம் , புதிய Update கொடுத்த Vignesh Shivan *Celebrity |Filmibeat Tamil
திருமண வரவேற்பு எப்போ

திருமண வரவேற்பு எப்போ

இன்று இரவு இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் மற்றொரு தகவலாக சென்னையில் மற்றொரு நாளில் திரையுலக பிரபலங்கள் அனைவரையும் அழைத்து பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பிளான் செய்திருக்கிறார்களாம்.

விவிஐபி.,க்கள் யாரெல்லாம் வர போறாங்க

விவிஐபி.,க்கள் யாரெல்லாம் வர போறாங்க

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண விழாவில் ரஜினி, கமல், விஜய் அஜித், கார்த்தி, சிரஞ்சீவி, சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியும், அஜித்தும் கலந்து கொள்ள உள்ளது ஏறக்குறைய முடிவாகி விட்டதாக நயன்தாரா தரப்பில் கூறப்படுகிறது. இவர்கள் தவிர முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

யப்பா...இத்தனை கட்டுப்பாடுகளா

யப்பா...இத்தனை கட்டுப்பாடுகளா

திருமண நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் பெற்றிருப்பதால் திருமணத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் மொபைல் போன் கொண்டு வரவோ, போட்டோ எடுக்கவோ அனுமதியில்லையாம். திருமண அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ள Security Code ஸ்கேன் செய்து வெரிஃபிகேஷன் செய்த பிறகே விருந்தினர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X