Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரசிகர்களுடன் கனெக்ட் படம் பார்க்க நினைத்த நயன்தாரா... கடைசியில இப்படியா ஆகணும்!
சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் கடந்த வாரம் 22ம் தேதி ரிலீஸானது.
நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படம் ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியிருந்தது.
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ரிலீஸான இந்தப் படத்தை நயன் - விக்கி தம்பதியினர் சொந்தமாக தயாரித்திருந்தனர்.
இந்நிலையில், மதுரையில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க நினைத்த நயனுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்துள்ளது.
Year Ender 2022: இந்த ஆண்டில் சூப்பர் ஹிட் படங்களின் 2ம் பாகம்... ரசிகர்கள் எதிர்பார்க்கும் மூவிஸ்

நயனின் கனெக்ட்
கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன், இப்போது பாலிவுட்டிலும் ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து விட்டார். அதேநேரம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி சமீபத்தில் நயன் நடித்த திரைப்படம் கனெக்ட். அஸ்வின் சரவணன் இயக்கிய இந்தப் படம் ஹாரர் திரில்லர் ஜானரில் உருவானது. நயன்தாராவுடன் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த வாரம் 22ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகியிருந்தது.

கனெக்ட் பாக்ஸ் ஆபிஸ்
நயன் லீடிங் ரோலில் நடித்துள்ளதால் கனெக்ட் படத்திற்கு அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், வழக்கமான பேய் படம் கான்செப்ட்டில் உருவாகியுள்ள கனெக்ட், ரசிகர்களிடம் சுத்தமாக கனெக்ட் ஆகவில்லை. இந்தப் படத்திற்கு அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளன. இதனால் கடுப்பான விக்னேஷ் சிவன், "நயன் நடித்துள்ள கனெக்ட் படத்திற்கு வன்மம் நிறைந்த பேக் ரிவியூக்கள் வருகிறது" என புலம்பித் தீர்த்திருந்தார். இந்நிலையில், இந்தப் படம் இதுவரை மொத்தமே உலகம் முழுவதும் 7 முதல் 9 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ப்ரோமோஷனுக்கு ரெடியான நயன்
ஏற்கனவே இந்தப் படம் வெளியாகும் முன்னர் ப்ரோமோஷனில் கலந்துகொண்டார் நயன். இந்நிலையில், தற்போது படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், புது ரூட்டை தேர்ந்தெடுத்தாராம் நயன். அதன்படி கனெக்ட் ஓடும் தியேட்டர்களுக்கு நேரில் சென்று, ரசிகர்களுடன் சேர்ந்து இந்தப் படத்தை பார்க்கலாம் என திட்டமிட்டிருந்தாராம். அந்த வரிசையில் மதுரையில் உள்ள ஒரு தியேட்டர் சென்று ரசிகர்களுடன் கனெக்ட் படம் பார்க்க ரெடியானார் நயன்.

இப்படி ஒரு ஏமாற்றமா?
ரசிகர்களுடன் சேர்ந்து கனெக்ட் படம் பார்க்க நினைத்த நயனுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளதாம். கனெக்ட் படம் பார்க்க ஆர்வமாக கிளம்பிக் கொண்டிருந்த நயனுக்கு தியேட்டர் ஓனர் கால் செய்துள்ளாராம். தியேட்டரில் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் இல்லாததால் காட்சி கேன்சல் ஆகும் நிலையில் உள்ளது. அதனால் நீங்கள் தியேட்டர் வர வேண்டாம் எனக் கூறியுள்ளாராம். இதனால் ரொம்பவே அப்செட்டான நயன், பாதி வழியிலேயே திரும்பி சென்றுவிட்டாராம். ரசிகர்களுடன் படம் பார்க்க நினைத்த நயனுக்கு இப்படியா நடக்கணும் என புலம்பி வருகின்றனர் ரசிகர்கள்.