For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நீதானே என் பொன்வசந்தம் மியூசிக்...மீண்டும் அந்த ராஜா மாஜிக்!

  By Shankar
  |

  எண்பது மற்றும் தொன்னூறுகளில் ஒரு ட்ரெண்ட் இருந்தது. அதாவது ஒரு படம் வெளியாகும் முன்பே அந்தப் படத்தின் இசைத் தட்டுகள், கேசட்டுகள் பட்டிதொட்டியெல்லாம் பாப்புலராகிவிடும். அந்த படம் வெளியாகும் போது, பாடல்களுக்கென்றே ஒரு முறை படம் பார்ப்பார்கள். குறிப்பாக இளையராஜா இசை அமைத்த படங்கள் பாடல்களுக்காகவே பெரும் வெற்றி பெற்றன.

  அன்றைக்கு அப்படி... இன்னிக்கு?

  அன்றைக்கு அப்படி... இன்னிக்கு?

  இன்றோ படத்தில் பாடல் ஓட ஆரம்பித்ததும், சிகரெட்டை கையில் எடுத்துக் கொண்டு, தியேட்டருக்கு வெளியே ஓடுகிறார்கள் ரசிக மகா ஜனங்கள். அதுமட்டுமல்ல, இந்த இடத்தில் பாட்டு வரப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து, மகா சலிப்புடன் திட்டவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.

  உண்மையிலேயே இந்த திட்டுக்களை ஒருமுறை கேட்டுவிட்டால், கீபோர்டில் கை வைக்கும் முன் ரொம்பவே யோசிப்பார்கள் ஹாரிஸ்கள், ஜிவிக்கள் போன்றோர்... !

  நீதானே என் பொன்வசந்தம்

  நீதானே என் பொன்வசந்தம்

  கடந்த சில ஆண்டுகளாக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழிப் படங்களில் அருமையான பாடல்களைத் தந்து, தமிழ் ரசிகர்களை கொஞ்சம் காய வைத்த இளையராஜா, முழு வேகத்தோடு இசையமைத்துக் கலக்கியிருக்கும் படம் கவுதம் மேனனின் நீதானே என் பொன்வசந்தம்.

  எட்டுப் பாடல்கள்

  எட்டுப் பாடல்கள்

  இந்தப் படத்தில் மட்டும் மொத்தம் 8 பாடல்கள். அனைத்துமே முழுப் பாடல்கள். இவற்றை முழுமையாக படத்தில் பயன்படுத்தியிருக்கிறாராம் கவுதம் மேனன்.

  இந்தப் பாடல்கள் அனைத்துமே உலகம் முழுவதும் உள்ள தமிழ் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. பாடல்களை கேட்டு ஆரம்பத்தில் கொஞ்சம் முணுமுணுத்த ராஜாவின் விமர்சகர்கள், இப்போது தங்களை மறந்து பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர்.

  என்னோடு வாவா..

  என்னோடு வாவா..

  படத்தின் அனைத்துப் பாடல்களையும் நா முத்துக்குமார் எழுதியிருக்கிறார். அவரது கேரியருக்கே புதிய அர்த்தம் தந்திருக்கின்றன இந்தப் பாடல்கள்.

  இந்த எட்டுப் பாடல்களில் நம்பர் ஒன் பாடலாக அமைந்திருப்பது 'என்னோடு வாவா என்று சொல்லமாட்டேன்...' கார்த்திக் பாடியுள்ள இந்தப் பாடலின் வரிகள் மிக எளிமையானவை.. அர்த்தமுள்ளவை.

  சற்று முன்பு பார்த்த...

  சற்று முன்பு பார்த்த...

  என்எஸ்கேவின் பேத்தி ரம்யா பாடியுள்ள பாடல் இது. அதிரடியாக ஆரம்பிக்கும் அட்டகாசமான மெலடி இது. ஒரு முறை கேட்ட பின், கைகள் தானாகவே ரீவைன்ட் பட்டனை அழுத்துகின்றன. அதுதான் ராஜாவின் மாஜிக்!

  சாய்ந்து சாய்ந்து...

  சாய்ந்து சாய்ந்து...

  யுவன் சங்கர் ராஜாவும் என்எஸ்கே ரம்யாவும் பாடியுள்ள இந்தப் பாடல் வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. மெல்லி தென்றலாய் இதயத்தை வருடுகிறது பாடலில் இழைந்தோடும் இசை...

  வானம் மெல்ல..

  வானம் மெல்ல..

  இளையராஜாவும் பெலா ஷிண்டேவும் பாடியிருக்கும் இன்னொரு அழகான மெலடி இது. மெதுவாக ஆரம்பித்து, அப்படியே மனசை இறுக்கி அணைத்துக் கொள்கிறது இந்த இசை. பாடலின் சரணங்கள் அத்தனை அழகு...!

  முதல் முறை பார்த்த ஞாபகம்...

  முதல் முறை பார்த்த ஞாபகம்...

  சுனிதி சௌஹான் கேரியர் பெஸ்ட் பாடல் என இசை விமர்சகர்கள் குறிப்பிடும் அளவுக்கு அருமையான பாடல். 'சில நேரம் மாயம் செய்தாய்...' என்ற வரிகளுக்கு அர்த்தம் கிடைத்துவிடுகிறது, பாடலைக் கேட்டு முடித்ததும்!

  புடிக்கல மாமு...

  புடிக்கல மாமு...

  எண்பதுகளின் கலாட்டா பாடல்களை நினைவூட்டும் இசை மற்றும் மெட்டு. ஆனால் அந்த ஆரம்ப இசை அசத்தல். கேட்க ஆரம்பித்ததும், கொஞ்சம் கொஞ்சமாக நம்மையும் அறியாமல் பாடலுக்குள் மூழ்கிவிடுகிறோம். படத்தின் காட்சியமைப்பு அநேகமாக எண்பதுகளில் வருவது போல இருக்கும் என நினைக்கிறேன்.

  பெண்கள் என்றால்...

  பெண்கள் என்றால்...

  இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார். காதல் தோல்வியால் எழும் விரக்தியின் வெளிப்பாடாக வரிகள். பெண்களும் ரசித்துக் கேட்கிறார்கள்.

  காற்றைக் கொஞ்சம்...

  காற்றைக் கொஞ்சம்...

  பாடல் வரிகள், இசை அமைப்பு, கார்த்திக்கின் குரல் அனைத்துமே மெஸ்மரிஸம் செய்துவிடுகிறது இந்தப் பாடலில்.

  மொத்தத்தில், இசை எனும் பெயரில் இரைச்சல் கேட்டு கரைச்சல் அடைந்த காதுகளுக்கு, ஒரு நிறைவான இசை விருந்தை அனுபவித்த உணர்வை மீண்டும் தந்திருக்கிறார் ராஜா !

  English summary
  Ilayaraaja's Neethaane En Ponvasantham music rocking Kollywood and created an extra ordinary expectations for the movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X