»   »  கண்டிப்பா எக்ஸ்போஸ் பண்ணுவேன், ஆனால் லீக், வீடியோ...: நேஹா ஞானவேல்ராஜா குமுறல்

கண்டிப்பா எக்ஸ்போஸ் பண்ணுவேன், ஆனால் லீக், வீடியோ...: நேஹா ஞானவேல்ராஜா குமுறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
குடும்பத்தை கெடுக்கும் நடிகைகள்- நேஹா ஞானவேல்ராஜா குமுறல்- வீடியோ

சென்னை: மகிழ்ச்சியான குடும்பங்களை நாசமாக்கிவிட்டு கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் சுற்றும் பெண்களை பார்த்து வந்த கோபத்தின் எதிரொலியே என் போஸ்ட் என நேஹா ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

திருமணமான ஆண்களின் வாழ்க்கையில் நுழைந்து அழகான குடும்பத்தை நாசமாக்கும் நடிகைகளை எச்சரித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா ட்வீட்டினார்.

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,

நன்றி

நன்றி

எனக்கு ஆதரவு தெரிவித்து ஆதரவாக பேசிய அனைவருக்கும் நன்றி. என் ட்வீட்டை பற்றிஅப்படியே செய்தி வெளியிட்ட ஆன்லைன் மீடியாக்களுக்கு நன்றி. மொத்த ஹீரோயின்களையும் குற்றம் சொல்வது போன்று செய்தி வெளியிட்ட சிலரை பார்த்து வருத்தமாக உள்ளது.

கோபம்

கோபம்

அது என் தனிப்பட்ட பிரச்சனையாக இருந்தால் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வேன். மகிழ்ச்சியான குடும்பங்களை நாசமாக்கிவிட்டு கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் சுற்றும் பெண்களை பார்த்து வந்த கோபத்தின் எதிரொலியே என் போஸ்ட்.

கணவர்

கணவர்

ஒரு விஷயத்தை பற்றி நான் பேசினால் என் வாழ்க்கையில் பிரச்சனையோ அல்லது என் கணவரை குறைகூறவோ இல்லை. பெண் இனத்திற்கே அவமானமாக இருக்கும் பெண்களின் மீது தான் என் கோபம். என் கணவரை இந்த பிரச்சனையில் இழுப்பது சரி அல்ல. எனக்கு தெரிந்த பல பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை பார்த்து குரல் கொடுக்கிறேன்.

ஹீரோயின்கள்

ஹீரோயின்கள்

யார் பெயரையாவது குறிப்பிட்டு கூறி அவர்களின் பெயரை கெடுக்காதீர்கள். பல ஹீரோயின்கள் என் தோழிகள். சொல்லப்போனால் குடும்பம் போன்று. ஒரு பெண்ணாக நான் அனைத்து பெண்களையும் மதிக்கிறேன். ஆனால் பிற பெண்களின் வாழ்க்கையை நாசமாக்குபவர்களை அல்ல. பெண்கள் அடுத்த பெண்களுக்கு உதவ வேண்டுமே தவிர அவர்களின் வாழ்க்கையை கெடுக்கக் கூடாது. அவர்களை எக்ஸ்போஸ் செய்வேன் என்று கூறினேன்.

வீடியோக்கள்

வீடியோக்கள்

எங்களுக்கு தெரிந்தவர்களின் குடும்பத்தை அவர்கள் நாசமாக்கினால் எக்ஸ்போஸ் செய்வேன். நான் சீப்பான லீக்குகள் அல்லது வீடியோக்களை பற்றி பேசவில்லை. அந்த பெண்களின் பெயரை பகிரங்கமாக அறிவிப்பேன்.

கவலை

அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதால் அவர்களின் பெயர்களை வெளியிடுவதில் தயக்கம் உள்ளது. குடும்பம், எதிர்காலத்தை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களை எக்ஸ்போஸ் செய்தால் கூட அதை இலவச விளம்பரமாக எடுத்துக் கொள்வார்கள். அதனால் அதை நான் செய்ய மாட்டேன். இப்படி நான் எச்சரித்ததே அவர்கள் முகத்தில் அறைந்தது போன்று இருக்கும் என்று தெரிவித்துள்ளார் நேஹா.

English summary
Producer Gnanavelraja's wife Neha tweeted that she will expose those women who ruin happy families and roam free without any guilt.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X