கத்தி படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசிய பாலிவுட் நடிகர்
பாலிவுட் நடிகரான கத்தி பட வில்லன், தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசியுள்ளாராம்.
துப்பாக்கி' படத்தையடுத்து விஜய்-ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘கத்தி'. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில், அனிருத் இசையில் விஜய் பாடிய பாடல் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. இந்த பாடலை லண்டனில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் படத்தின் டப்பிங் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளாராம். இதனை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் பாலிவுட் நடிகர்
டப்பிங் பேசுவது குறித்து நீல் நிதின் முகேசிடம் முருகதாஸ் கேட்டபோது எதுவும் யோசிக்காமல் உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம். கடந்த மூன்று நாட்களாக நடைபெறும் டப்பிங்கில் தமிழில் பேசி அசத்தி வருகிறார் நீல் நிதின் முகேஷ்.
தமிழ் கஷ்டம்தான்
தமிழ் மொழி கஷ்டம்தான், ஆனால் இது எனக்கு ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் என்று கூறியுள்ளார் நீல் நிதின் முகேஷ்.
இந்தியில் ஹீரோ
இந்தியில் ‘ஜானி கத்தார்' உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் நீல் நிதின் முகேஷ் தமிழில் அறிமுகமாகும் படம் இது.
தீபாவளி ரிலீஸ்
கத்தி படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவெடுத்து, அதற்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் படக்குழுவினர். வில்லன் பேசும் தமிழ் எப்படியிருக்குமோ? படம் வரட்டும் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











