»   »  என்னது மெர்சலோட மோதுறேனா? பதறிப்போன இயக்குநர்!

என்னது மெர்சலோட மோதுறேனா? பதறிப்போன இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'மாநகரம்' சந்தீப்கிஷன், விக்ராந்த் ஆகியோர் நடிக்க சுசீந்திரன் இயக்கும் படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'. இந்தப் படத்தில் சூரி காமெடியனாக நடிக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார்.

முதலில் 'அறம் செய்து பழகு' எனப் பெயரிடப்பட்டிருந்த இந்தப் படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

தீபாவளிக்கு ரிலீஸ் :

தீபாவளிக்கு ரிலீஸ் :

'நெஞ்சில் துணிவிருந்தால்' தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, மெர்சலுடன் மோதுகிறார் இயக்குநர் சுசீந்திரன் என்கிற ரீதியில் செய்திகள் வெளியாகின.

மெர்சலான இயக்குநர் :

மெர்சலான இயக்குநர் :

இயக்குநர் சுசீந்திரன் அடுத்து விஜய்யைக் கதாநாயகனாக வைத்துப் படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார். இந்நிலையில், இப்படியான செய்திகள் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கவே, அவரே விளக்கம் அளித்துள்ளார்.

மெர்சலை எதிர்க்கலை; மெர்சலுடன் வர்றோம் :

மெர்சலை எதிர்க்கலை; மெர்சலுடன் வர்றோம் :

'எங்களுடைய நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளோம். அதனால் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா எனக் கேட்கிறார்கள். மெர்சலை எதிர்த்து வரவில்லை; மெர்சலுடன் வருகிறோம்.

இது ஒண்ணும் புதுசு இல்ல :

இது ஒண்ணும் புதுசு இல்ல :

இதேபோலத்தான் 2013 தீபாவளிக்கு அஜித் சாரின் ஆரம்பம் படத்தோடு சேர்ந்து 'பாண்டிய நாடு' படத்தை வெளியிட்டோம். இரண்டு படங்களும் வெற்றி பெற்றன.' எனத் தெரிவித்தார் சுசீந்திரன்.

தீபாவளி சரவெடி :

தீபாவளி சரவெடி :

இந்த வருடத் தீபாவளிக்கு, விஜய்யின் 'மெர்சல்', சுசீந்திரன் இயக்கும் 'நெஞ்சில் துணிவிருந்தால்', கௌதம் கார்த்திக் நடிக்கும் 'ஹரஹர மஹாதேவகி', அர்ஜூன் இயக்கும் 'சொல்லிவிடவா' ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. இவற்றில் எது பட்டையைக் கிளப்பும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Director Suseendran clarified the release of 'nenjil thunivirundhal'. He likes to work with Vijay in next movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil