»   »  அவர் வருவாரா...: ரஜினிக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் நெருப்புடா டீம்

அவர் வருவாரா...: ரஜினிக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் நெருப்புடா டீம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் பிரபுவின் நெருப்பு டா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கவுரவத் தோற்றத்தில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.

ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் வந்த நெருப்புடா பாடல் உலகம் முழுவதும் பிரபலம் ஆனது. தமிழ் தெரியாதவர்கள் கூட நெருப்புடா என்று கூறும் அளவுக்கு பிரபலம் ஆனது.

Neruppu da team waiting for Rajinikanth

இந்நிலையில் தான் விக்ரம் பிரபு தயாரித்து, நடிக்கும் படத்திற்கு நெருப்பு டா என்று பெயர் வைத்துள்ளனர். புதுமுகம் அசோக் குமார் இயக்கி வரும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

படத்தில் விக்ரம் பிரபு ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக நடிக்கிறாராம். இதனால் ரஜினியை கவுரவத் தோற்றத்தில் அதுவும் சூப்பர் ஸ்டாராகவே நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் ரஜினி இதுவரை பதில் கூறாமல் உள்ளாராம்.

ரஜினிகாந்த் முன்னதாக 9 படங்களில் சூப்பர் ஸ்டாராகவே கவுரவத் தோற்றத்தில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vikram Prabhu's Neruppu da team is waiting for Rajinikanth to do a cameo. Will he says YES?. Lets wait and see.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil