என்னது பீஸ்ட் பாவங்களா? ஜிபி முத்துவை வச்சு பரிதாபங்கள் டீம் பண்ண சம்பவம்.. யூ டூ நெட்பிளிக்ஸ்!

சென்னை: ஸ்குயிட் கேம் வெப்தொடரை தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்த பரிதாபங்கள் யூடியூப் சேனலை வைத்து நெட்பிளிக்ஸ் ஒரு புரோமஷன் வீடியோவை தயாரித்து இருந்தது.

தற்போது அதே பாணியில் பீஸ்ட் படத்தின் ஓடிடி ரிலீஸை பப்ளிசிட்டி செய்ய மீண்டும் பரிதாபங்கள் யூடியூப் சேனலுடன் நெட்பிளிக்ஸ் கைகோர்த்துள்ளது.

கோபி, சுதாகர் மட்டுமின்றி ஆதவன், தீபா மற்றும் ஜிபி முத்து உள்ளிட்ட பிரபலங்கள் பீஸ்ட் படத்தை மேலும் வச்சு செய்வதை பார்த்து நெட்டிசன்கள் பயங்கரமாக ஓட்டி வருகின்றனர்.

பீஸ்ட் பாவங்கள்

பீஸ்ட் பாவங்கள்

பாவம்யா.. அந்த பீஸ்ட் படத்தை விட்றுங்க என அஜித் ரசிகர்களே கெஞ்சும் அளவுக்கு சர்வதேச அளவில் பீஸ்ட் படத்தை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் ட்ரோல்களையும் கேள்விகளையும் எழுப்பி பங்கம் பண்ணி வருகின்றனர். இந்நிலையில், நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக புரொமோஷன் செய்கிறேன் என்கிற பேர்வழியில் பீஸ்ட் பாவங்கள் வீடியோவை வெளியிட்டு மீண்டும் பீஸ்ட் படத்தை வச்சு செய்துள்ளது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

வீரராகவனாக ஆதவன்

வீரராகவனாக ஆதவன்

ஆதித்யா சேனலில் காமெடி தொகுப்பாளராக கலக்கி வரும் நடிகர் ஆதவன் தான் இதில், பீஸ்ட் பட வீரராகவன் கெட்டப்பில் என்ட்ரி கொடுத்துள்ளார். காமெடி பண்றேன்னு அந்த கேரக்டரை இப்படியா கலாய்ப்பீங்கன்னு பீஸ்ட் பாவங்கள் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

டாக்டர் தீபா

டாக்டர் தீபா

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்த நடிகை தீபா பீஸ்ட் படத்தில் நடிக்காத குறையை பீஸ்ட் படத்தின் புரொமோஷன் வீடியோவில் நடித்து தீர்த்துக் கொண்டார். பாக்கியலட்சுமி சீரியலை பார்க்கலையான்னு கூடவே சேர்ந்து விஜய் டிவி சீரியலுக்கும் புரமோஷனை பக்காவாக செய்து விட்டார்.

ஜிபி முத்து ரகளை

ஜிபி முத்து ரகளை

இந்த பீஸ்ட் பாவங்கள் வீடியோவிலேயே ரசிகர்களை கொஞ்சம் சிரிக்க வைத்த போர்ஷன் என்றால் அது ஜிபி முத்து போர்ஷன் தான் என அவரது ரசிகர்கள் யூடியூப் வீடியோவுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு கெத்துக் காட்டி வருகின்றனர். பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற காமெடியை விட பீஸ்ட் பாவங்கள் காமெடி பரவாயில்லை என ரசிகர்களை ரகளை செய்து வருகின்றனர்.

கான்செப்ட்டே இல்லை

கான்செப்ட்டே இல்லை

மால் செட்டுக்குள் பீஸ்ட் கான்செப்ட்டை ஆரம்பித்து வைத்து விட்டு மாறி மாறி அறைந்து கொள்ளும் காட்சியை வைத்த நிலையில், இது என்ன கான்செப்ட் என கேட்க கோபியும் சுதாகரும் கான்செப்ட்டே இல்லை என சொல்லும் இடத்திலேயே பீஸ்ட் படத்தை இருவரும் பந்தாடி விட்டனர் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஜெட் ஓட்டலையா

ஜெட் ஓட்டலையா

பீஸ்ட் படத்தை நெட்பிளிக்ஸில் கண்டுகளியுங்கள் என சொல்வதற்காக உருவாக்கப்பட்ட வீடியோவும் அந்த படத்திற்கே எதிராக திரும்பி விட்டதே என நெட்பிளிக்ஸை பார்த்து செம காண்டில் உள்ளனர் விஜய் ரசிகர்கள். பீஸ்ட் பாவங்கள் வீடியோவில் ஏன் ஃபைட்டர் ஜெட் ஓட்டும் காட்சியை வைக்கவில்லை என பரிதாபங்கள் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி கதற விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X