»   »  இசையமைப்பாளர் 'சாம் டி ராஜ்' உடன் இணையும் நெட்பிலிக்ஸ்!

இசையமைப்பாளர் 'சாம் டி ராஜ்' உடன் இணையும் நெட்பிலிக்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'வந்தா மல' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் டி ராஜ். தற்போது வி இஸட் துரை இயக்கத்தில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படத்திற்கும் மேலும் 2 படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

படத் தயாரிப்பிலும் ஆன்லைன் வீடியோ சேவையிலும் பிரபலமான அமெரிக்காவின் 'நெட்பிலிக்ஸ்' நிறுவனத்தினர், சமீபத்தில் இசையமைப்பாளர் சாம் டி ராஜை, சாலிகிராமத்தில் உள்ள அவரது ஸ்டுடியோவில் சந்தித்தனர்.


Netflix Team visited Music composer Sam D Raj

அப்போது நெட்பிலிக்ஸும் சாம் டி ராஜின் விகோஷ் மீடியாவும் இணைந்து பணியாற்றும் முடிவுக்கு வந்துள்ளனர்.


Netflix Team visited Music composer Sam D Raj

இதுவரை இந்தியாவில் தனது கிளையை துவக்காத 'நெட்பிலிக்ஸ்' நிறுவனம் அடுத்த மாதம் மும்பையில் திறக்க திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் வீடியோ சேவையில் பிரபலபமான இந்த நிறுவனம் ஏற்கனவே ஷாருக்கான் அவர்களின் 'ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட்' மற்றும் 'ரிலையன்ஸ் ஜியோ'யுடன் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Technical Heads from Netflix, USA, One of the world’s Largest Video Streaming company and Film Production company have visited Music composer Sam D Raj at his studio in Saligramam, Chennai last Friday for a mutual tie up with his media production company - Vgosh Media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil