என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. பொன்னியின் செல்வன் கேரக்டர் போஸ்டர்களை பங்கமாக கலாய்த்த ரசிகர்கள்!

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு மற்றும் கதைமாந்தர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வரிசையாக நேற்று வெளியாகின.

பாகுபலி அளவுக்கு பெரிய பில்டப் உடன் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில், அதனை பார்த்த ரசிகர்கள் இதுக்கு ஃபேன்மேட் எடிட்டிங்கே பெட்டரா இருக்கும் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

விக்ரமின் போஸ்டரை பார்த்துத் தான் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

திடீர் அறிவிப்பு

திடீர் அறிவிப்பு

லைகாவின் சேர்மேன் சுபாஸ்கரனின் பிறந்தநாளை முன்னிட்டு டான் படத்தின் ரிலீஸ் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் 5 நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் என திடீரென வெளியானதும் எந்தவொரு முன்னறிவிப்பும் கொடுக்காமல் இப்படி போட்டு டிரெண்ட் பண்ண முடியாமல் போய்விட்டதே என ரசிகர்கள் ரொம்பவும் ஃபீல் செய்துள்ளனர்.

ரொம்ப சுமார்

ரொம்ப சுமார்

மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர்களின் ஃபர்ஸ்ட் லுக் அவ்வளவு அற்புதமாக இல்லை என்றும் எதுவுமே ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றும், எல்லா போஸ்டரையும் அதிகளவில் பிரைட்னஸை ஏற்றிப் பார்த்தால் கூட ரொம்ப சுமாராகவே இருப்பதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

கோபத்தில் விக்ரம் ரசிகர்கள்

கோபத்தில் விக்ரம் ரசிகர்கள்

மற்ற நடிகர்களின் போஸ்டர்கள் கூட சுமாராக உள்ளது என்றும் சியான் விக்ரமின் போஸ்டரை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்று விக்ரம் ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் படத்தின் மிகப்பெரிய அப்டேட் வந்தும் எந்தவொரு பிரபலங்களும் அதைப்பற்றி பேசவே இல்லை என்றும் டிரெண்டிங்கில் டாப்பில் கூட வரவில்லை என்றும் லைகாவின் புரமோஷன் படுமோசமாக இருப்பது படம் எப்படி உருவாகி உள்ளது என்கிற அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கார்த்தி லுக்கில் குழப்பம்

கார்த்தி லுக்கில் குழப்பம்

வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி இந்த படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், வில்லன் லுக்கில் கார்த்தி இருக்கும் போஸ்டரை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர். கம்சன் வேடத்தில் கோட்டைக்குள் கார்த்தி நுழைவார் என்றும் குரவைக் கூத்து நடக்கும் போது இந்த காட்சி இருக்கலாம் என்றும் ரசிகர்களே விளக்கம் கொடுத்து தேற்றிக் கொள்கின்றனர்.

வச்சு செய்யும் ரசிகர்கள்

வச்சு செய்யும் ரசிகர்கள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் போஸ்டர்களை பார்த்தால் இப்படித்தான் இருக்கு என வடிவேலு மற்றும் மணிவண்ணன் இருக்கும் லண்டன் பட போட்டோமீமை போட்டு கலாய்த்து வருகின்றனர். போஸ்டர் டிசைனே இப்படி சொதப்பல் என்றால் படம் எப்படி சொதப்பி இருக்கும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சினேகன் சார் நீங்களா?

சினேகன் சார் நீங்களா?

மகான் படத்தில் ஏகப்பட்ட தோற்றத்தில் மிரட்டியெடுத்த சியான் விக்ரமின் பொன்னியின் செல்வன் பட போஸ்டரை பார்த்த ரசிகர்கள் சினேகன் சார் நீங்களா? என ட்ரோல் செய்து வருகின்றனர். ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தை இப்படி மோசமாக கிரியேட் செய்திருக்க வேண்டாம் என்றும் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இதுவே மிரட்டுது

இதுவே மிரட்டுது

பொன்னியின் செல்வன் பட போஸ்டர்களை விட காஷ்மோரா படத்திற்காக வெளியான நடிகர் கார்த்தியின் இந்த போஸ்டர்கள் வேறலெவலில் மிரட்டுகின்றன என்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென் லுக் அளவுக்கு கூட ஐஸ்வர்யா ராயின் நந்தினி லுக் இல்லாதது வருத்தம் அளிக்கிறது என்றும் வெளுத்து வாங்கி உள்ளனர். லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை மேலும், பட்டைத் தீட்டுவார்களா? படம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X