தமன்கிட்ட இருந்து காப்பாத்துங்க அஜித் அண்ணா...துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் கேட்டு கதறும் விஜய் ரசிகர்கள்

சென்னை: விஜய்யின் வாரிசு படத்தில் இருந்து 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த வாரம் வெளியானது.

விஜய் பாடியுள்ள 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடலை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், ரஞ்சிதமே பாடல் குறித்து ட்வீட் செய்துள்ள தமன், மீண்டும் வாண்ட்டடாக வண்டியில் ஏறி நெட்டிசன்களின் கைகளில் சிக்கியுள்ளார்.

விஜய் குரலில் ரஞ்சிதமே

விஜய் குரலில் ரஞ்சிதமே

விஜய்யின் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் பொங்கலுக்கு வெளியாகிறது. வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், வாரிசு படத்தில் இருந்து முதல் பாடலான 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' கடந்த வாரம் வெளியானது. விஜய் பாடியுள்ள இந்தப் பாடலுக்கு ஜானி மாஸ்டர் கோரியோகிராபி செய்துள்ளார். விஜய் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரஞ்சிதமே பாடல் யூடியூப்பில் ஹிட் அடித்தாலும், இன்னொரு பக்கம் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

விடாமல் விரட்டும் நெட்டிசன்கள்

விடாமல் விரட்டும் நெட்டிசன்கள்

ரஞ்சிதமே பாடலில் ஸ்டைலிஷான மாஸ் லுக்கில் இருக்கும் விஜய், டான்ஸிலும் தெறிக்கவிட்டுள்ளார். ஆனால், தமனின் மியூசிக் மீது நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் வைத்துள்ளனர். மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சர்காரு வாரி பட்டா' படத்தில் வரும் 'மா மா மகேஷா', நாட்டுப்புற பாடலான 'மொச்சக்கொட்ட பல்லழகி' உட்பட பல பாடல்களின் காப்பியாக உள்ளது என ட்ரோல் செய்து வருகின்றனர். ஒரு பாட்டுல இருந்து சுட்டா ஈஸியா கண்டுபிடிச்சடலாம்ன்னு பல பாடல்களில் இருந்து சுட்டுள்ளார் தமன் எனவும் விளாசினர்.

தமனின் ட்வீட்

தமனின் ட்வீட்

தமனின் மியூசிக் போன்றே ஜானி மாஸ்டரின் டான்ஸ் மூவ்மெண்ட்ஸும் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்படுகிறது. அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்களில் வரும் அதே ஸ்டெப்பை, ரஞ்சிதமே பாடலுக்கும் கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் ரஞ்சிதமே பாடல் குறித்து ட்வீட் செய்திருந்த தமன், "ரஞ்சிதமே பாட்டோட முழு வீடியோவும் இப்பத்தான் பார்த்தேன். தியேட்டர் சீட்ல யாருமே உக்கார மாட்டீங்க, உங்களோட நானும் ஒரு ரசிகனா பின்னி பெடல் எடுக்கப் போறேன்" என்பதாக பதிவிட்டுள்ளார்.

காப்பாத்துங்க அஜித் அண்ணா

காப்பாத்துங்க அஜித் அண்ணா

இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் தமன் மீது செம்ம கடுப்பில் உள்ளனர். ஏற்கனவே ரஞ்சிதமே பாடலை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில், இப்போ இந்த அப்டேட் எல்லாம் தேவையா என தமனை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும், சீக்கிரம் துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் பண்ணுங்க அஜித் அண்ணா, அப்போதான் ரஞ்சிதமே பாட்ட ட்ரோல் செய்வதை நெட்டிசன்கள் விடுவார்கள் எனவும் கூறி வருகின்றனர். துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகிவிட்டால், ரஞ்சிதமே பாடலை நெட்டிசன்கள் மறந்துவிடுவார்கள் என்பதையே விஜய் ரசிகர்கள் அப்படி கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X