தம்பி அது லியோ காஃபி இல்லப்பா... தளபதி 67 டைட்டில்.. விழுந்து விழுந்து சிரித்த அஜித்தின் வீடியோ
சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
லியோ என்ற டைட்டிலை அசத்தலான ப்ரோமோவுடன் படக்குழு வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளது.
முன்னதாக குருதி, குருதிப் புனல் என பலவிதமான டைட்டில்களை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
ஆனால் யாருமே எதிர்பார்க்காதவண்ணம் லியோ என்ற டைட்டிலை கன்ஃபார்ம் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் லியோ என்ற டைட்டிலை நெட்டிசன்கள் விதவிதமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

விஜய்யின் லியோ
கடந்த சில மாதங்களாகவே விஜய்யின் தளபதி 67 படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். லோகேஷ் - விஜய் காம்போ என்பதால் இந்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் தாறுமாறாக இருந்தது. மைக்கேல் பட ப்ரோமோஷனில் பேசிய லோகேஷ் பிப்ரவரி முதல் வாரத்தில் தளபதி 67 அப்டேட் வெளியாகும் எனக் கூறியிருந்தார். அதன்படி கடந்த 3 தினங்களாக தளபதி 67 அப்டேடால் சமூக வலைத்தளங்களே திணறி வருகிறது. இந்நிலையில் இன்று தளபதி 67 படத்தின் டைட்டில் லியோ என படக்குழு அறிவித்துள்ளது.

ட்ரோலாகும் லியோ டைட்டில்
செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் லியோ திரைப்படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், சண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், ஏஜெண்ட் டினா, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதனிடையே தற்போது வெளியான லியோ டைட்டிலை, லியோ காஃபியுடன் சேர்த்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். லியோ காஃபி என்ற ஹேஷ்டேக்கில் அடுத்தடுத்து மீம்ஸ் கண்டெண்டுகளை ட்வீட் செய்து தெறிக்கவிட்டுள்ளனர். என்ன தான் டைட்டில் மாஸாக இருந்தாலும் லியோ என்றதும் காஃபி தான் நினைவில் வருவதாக நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

லியோ காஃபி குடிப்பவர்கள் கொண்டாடும் வெற்றி
மேலும் கொக்கைன் பவுடர் தேடிப் போகும் விஜய் கடைசியாக லியோ காஃபி பவுடரை கண்டுபிடிப்பது தான் இந்தப் படத்தின் ஒன்லைன் என கமெண்ட் செய்துள்ளார் ஒரு நெட்டிசன். மேலும், இது லியோ காஃபி குடிப்பவர்கள் கொண்டாடும் வெற்றி, காலத்தை வென்ற ரசனை என்ற லியோ காஃபியின் கேப்ஷனுடன் கலாய்த்து வருகின்றனர். அதேபோல் LCU என சொல்லிட்டு இப்படி லியோ காஃபிய கொண்டுவந்துருக்கீங்க என கேட்டு வருகின்றனர்.

விழுந்து விழுந்து சிரித்த அஜித்
தொடர்ந்து லியோ காஃபியை வைத்து தளபதி 67 டைட்டிலை நெட்டிசன்கள் ட்ரோல் செய்வது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே அஜித் ரசிகர்களும் லியோ டைட்டிலை ட்ரோல் செய்து வருகின்றனர். லியோ டைட்டிலை கேட்டு அஜித் சிரிப்பதை போன்று வீடியோ எடிட் செய்துள்ள அவர்கள், அதனை டிவிட்டரில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். அதேபோல், டெல்லி, விக்ரம், ரோலக்ஸ் போன்ற லோகேஷின் கேரக்டர்களை விட லியோ தரமாக இல்லையென்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











