ஒரு குறும்படம் கூட போடலியே ஆண்டவரே... புலம்பி தீர்க்கும் ரசிகர்கள்

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்டது. பிரம்மாண்ட துவக்க விழாவுடன் துவங்கப்பட்ட இந்த போட்டியை இந்த முறையும் கமலே தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சி மூன்று வாரங்களைக் கடந்து, வெற்றிகரமாக நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

பல்வேறு துறைகளை சேர்ந்த 18 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். முந்தைய சீசன்களை போலவே இந்த சீசனிலும் முதல் வாரத்தில் எலிமினேஷன் கிடையாது. இருந்தாலும் முதல் வார நிறைவில் திருநங்கையான நமிதா மாரிமுத்து, தவிர்க்க முடியாத மருத்துவ காரணங்களால் வெளியேறினார்.

9 ஆக குறைந்த நாமினேஷன்

9 ஆக குறைந்த நாமினேஷன்

நமிதா வெளியேறிய பிறகு முதல் எவிக்ஷனுக்கான நாமினேஷன் நடத்தப்பட்டது. 17 பேர் இருந்த வீட்டில் 15 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். இவர்களில் மக்கள் அளித்த ஓட்டுக்களில் மிக குறைந்த அளவு ஓட்டுக்களைப் பெற்று மலேசிய சோஷியல் மீடியா பிரபலமான நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து மூன்றாவது வாரத்திற்கான எவிக்ஷனுக்கு 9 பேர் நாமினேட் செய்யப்பட்டனர்.

இன்ஃப்ளுயன்ஸ் செய்த அபிஷேக்

இன்ஃப்ளுயன்ஸ் செய்த அபிஷேக்

மூன்றாவதாக நடத்தப்பட்ட பஞ்சதந்திரம் டாஸ்க்கில் அபிஷேக் வீட்டில் உள்ளவர்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்தார். ப்ரோமோவில் வரவேண்டும், கேமிராவில் தெரிய வேண்டும், அனைவராலும் பேசப்பட வேண்டும் எனச் சொல்லி, பிரியங்காவுடன் சேர்ந்து அபிஷேக் செய்த காரியங்கள் வீட்டில் இருந்தவர்களை மட்டுமின்றி, வெளியில் இருந்து பார்த்தவர்களையும் எரிச்சல் அடைய வைத்தது.

அபிஷேக்கை வெளியேற்றுங்கள்

அபிஷேக்கை வெளியேற்றுங்கள்

பிரியங்கா, அபிஷேக்கிற்கு எதிராக சோஷியல் மீடியாக்களில் ஏராளமானோர் கமெண்ட் செய்தனர். அதிலும் குறிப்பாக அபிஷேக்கை வெளியேற்றினால் தான் அனைவரும் அவர்களின் தனித்துவத்தை வெளிக்காட்டி, அவர்களுக்கான விளையாட்டை அவர்கள் ஆட துவங்குவார்கள் என பலர் கூற துவங்கி விட்டனர். இதை வார இறுதி எபிசோடில் கமல் கேள்வி கேட்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர்.

கேள்வியால் தெறிக்க விட்ட கமல்

கேள்வியால் தெறிக்க விட்ட கமல்

அதே போல் சனிக்கிழமை எபிசோடில் கமலும், பிரியங்கா மற்றும் அபிஷேக்கை நேருக்கு நேராக கேள்வி கேட்டு தெறிக்க விட்டார். ராஜு வீட்டின் கேப்டன் ஆக கூடாது, சிபி வர வேண்டும் என அபிஷேக் செய்த திட்டங்களை கமல் போட்டுடைத்தார். அதோடு உங்கள் விருப்பப்படி தான் எல்லாம் நடக்க வேண்டுமா என முகத்தில் அறைந்தது போல் கேட்டார். இதை ரசிகர்களும் வரவேற்றனர்.

ஏன் குறும்படம் போடவில்லை

ஏன் குறும்படம் போடவில்லை

இருந்தாலும் அபிஷேக் மறைமுகமாக செய்த சதி வேலைகள், பிரியங்கா கையில் எழுதி காட்டி விட்டு அப்படி எதுவும் செய்யவில்லை என சொன்ன போதும் கமல் ஏன் குறும்படம் போட்டு காட்டவில்லை என பலர் கவலையும், ஏக்கமும் தெரிவித்துள்ளனர். இந்த சீசன் துவங்கியதில் இருந்து இதுவரை ஒரு குறும்படம் கூட போட்டுக் காட்டவில்லையே என பலர் கேட்டுள்ளனர்.

அபிஷேக் முகமுடியை கிழித்திருக்கலாம்

அபிஷேக் முகமுடியை கிழித்திருக்கலாம்

அபிஷேக் செய்த காரியங்களை குறும்படமாக போட்டுக் காட்டி, அவரை கேள்விகளால் விளாசி இருந்தால் அவரின் முகமூடி கிழிக்கப்பட்டிருக்குமே. இப்படி சாதாரணமாக கேள்வி கேட்டு, அவரை வெளியேற்றி விட்டதால் வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்கள் அபிஷேக்கை ரொம்ப நல்லவர் ரேஞ்சில் வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்களே என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X