twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அசீம் நியாயத்தை சொல்ல அனுமதிக்கும் பிக்பாஸ்..மனைவியின் நியாயத்தை யார் கேட்பது?..நெட்டிசன்கள் கேள்வி

    |

    சென்னை: அசீம் ஆடல் பாடல் டாஸ்க்கில் கவிதைப்படிக்கிறேன் என சொந்தக் கதையை கவிதையாக சொன்னார்.

    பின்னர் மோனோ ஆக்டிங் என அதிலும் தனது சொந்தக் கதையையே சொல்லி அனுதாபம் தேடினார்.

    பிக்பாஸ் போன்ற தளத்தில் தனது சொந்த வாழ்க்கையைச் சொல்லி பிரிந்துப்போன மனைவியைப்பற்றி குற்றம் சாட்ட பிக்பாஸ் எப்படி அனுமதிக்கலாம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    மீண்டும் ஆரம்பிக்கும் அசீம்..தனலட்சுமியுடன் மோதல்..அமைதியிழக்கும் ஹவுஸ்மேட்ஸ் மீண்டும் ஆரம்பிக்கும் அசீம்..தனலட்சுமியுடன் மோதல்..அமைதியிழக்கும் ஹவுஸ்மேட்ஸ்

     அழுகாச்சி கதை கேட்க புதிய முறை கொண்டுவந்த பிக்பாஸ்

    அழுகாச்சி கதை கேட்க புதிய முறை கொண்டுவந்த பிக்பாஸ்

    பிக்பாஸ் போட்டியில் 100 நாட்கள் போட்டியாளர்கள் தங்கி தங்கள் திறமைகளை போட்டியில் வெளிப்படுத்துவார்கள். இதில் அவரவர் மன உறுதி, தனிப்பட்ட நடத்தையை கவனிக்கும் மக்கள் அவர்களை வாக்களித்து இருக்க வைப்பார்கள் அல்லது வெளியேற்றுவார்கள். இதில் சொந்தக்கதை சொல்லும் டாஸ்க் எல்லா சீசனிலும் வைக்கப்படும். இது அறுவையாக, அழுகாச்சியாக மாறியதால் இம்முறை 60 நொடிகளில் சக போட்டியாளர்கள் அனுமதித்தால் தொடர்ந்து கதையைச் சொல்லலாம் என மாற்றப்பட்டது. இதில் அசீம் போன்றோர் கதையை கேட்க போட்டியாளர்கள் தயாராக இல்லை.

     ஆடல் பாடல் டாஸ்கை சொந்த விவகாரத்திற்கு பயன்படுத்திய அசீம்

    ஆடல் பாடல் டாஸ்கை சொந்த விவகாரத்திற்கு பயன்படுத்திய அசீம்

    இதே போல் பலரது கதையும் கேட்க விரும்பவில்லை. இந்நிலையில் ஆடல் பாடல் டாஸ்க்கில் அசீம் கவிதைப்படிக்கிறேன் என நைசாக கவிதைபோல் தனது வாழ்க்கைக் கதையை தான் நல்லவர்போல் மனைவி பிடிவாதம் பிடித்து பிரிந்து சென்றதுபோல் பதிவிட்டார். பின்னர் மோனோ ஆக்டிங் என்று அதே கதையை மோனோ ஆக்டிங் செய்து காட்டினார். தனது வாழ்க்கையின் சம்பவத்தை தன் பக்கம் நியாயம் இருப்பதுபோல் தனது துணைவியினால் துன்பம் அனுபவிப்பதுபோல் ஒரு செய்தியை பதிவு செய்ய கோடிக்கணக்கானோர் பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொண்டார்.

     ஒருபக்க நியாயத்தை பதிவு செய்ய அனுமதிப்பது என்ன நியாயம்?

    ஒருபக்க நியாயத்தை பதிவு செய்ய அனுமதிப்பது என்ன நியாயம்?

    இது போன்று சொந்தக் கதைகளை ஒரு பக்கம் மட்டுமே நியாயமான தகவலை ஒருவர் பதிவு செய்வது மறுபக்கத்தில் இருப்பவருடைய நியாயத்தை பறிக்கும் செயல் என்பதை பிக் பாஸ் உணர மறப்பது ஏன்? என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பத்தொடங்கி உள்ளனர். நாணயத்திற்கு இரண்டு பக்கம் உண்டு. அசீம் வாழ்க்கையிலும் இரண்டு பக்கங்கள் உண்டு. அசீமின் பக்கத்தை மட்டுமே பதிவு செய்து மற்றொரு பக்கத்தை பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்காத நிலையில் அசீமுக்கு மட்டும் அவர் தரப்பை பொதுவெளியில் சொல்ல வாய்ப்பு வழங்குவது சரியாக தெரியவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

     சொந்தக்கதை சோகக்கதை எல்லோருக்கும் உண்டு, அசீமுக்கு மட்டுமல்ல

    சொந்தக்கதை சோகக்கதை எல்லோருக்கும் உண்டு, அசீமுக்கு மட்டுமல்ல

    இதில் கொடுமை என்னவென்றால் டேலண்ட் ஷோவில் சொந்த கதையை கொண்டு வந்தது சிறப்பான ஒன்று என அசீமை பாராட்டினார்கள் ஹோம்மேட்ஸ்கள். அச்சீம் போன்ற கதைதான் ஏடிகே கதையும். ஆனால் அவர் எங்கும் அதை சொல்லி புலம்பவில்லை. ஒருமுறை சக போட்டியாளரிடம் சொன்னார் அவ்வளவே. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சொந்த கதை சோகக்கதை ஒன்று இருக்கும். அதை கேட்டால் அவர்கள் பக்கம் நியாயம் இருப்பதுபோல் அழகாக சொல்வார்கள். அதை பக்கத்தில் அமர்ந்து கேட்டால் சீரியல் கலைஞரை விட அழகாக நடித்து சொல்வார்கள். இப்படி ஒவ்வொருவரும் பிக்பாஸை பயன்படுத்த தொடங்கினால் தனிப்பட்ட நபர் சுதந்திரம் பாதிப்பது மட்டுமல்ல அழுகாச்சி நிகழ்ச்சியாக இது மாறும் என நெட்டிசன்கள் பதிவிடுகிறார்கள். பிக்பாஸ் இதை கவனித்தில் கொள்வார்களா?

    English summary
    Bigg Boss [பிக் பாஸ் 6] Tamil Season 6: Aseem recited his own story as a poem in the dance-song task. , Later he sought sympathy by telling his own story as mono acting. Netizens are questioning how Bigg Boss can allow his estranged partner to blame his estranged partner by telling his personal life on a platform like Bigg Boss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X