»   »  விட்டா அவதாரை பீட் பண்ணிடும்னு சொல்லாம போனீங்க: பார்த்திபனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

விட்டா அவதாரை பீட் பண்ணிடும்னு சொல்லாம போனீங்க: பார்த்திபனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சும்மா இருந்த பார்த்திபன் மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் பேசி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் கொஞ்சம் ஜாஸ்தியாகவே விஜய்யை புகழ்ந்து பேசிவிட்டார். விழாவில் பேசிய அவர், விஜய்யும், விஜய் ரசிகர்கள் மட்டும் சேர்ந்தாலே அந்த படம் அட்லீஸ்ட் ரூ. 100 கோடி வசூலிக்கும். விஜய்யும், ஆஸ்கர் நாயகன் ரஹ்மானும் இணைந்தால் அந்த படம் ரூ. 200 கோடி வசூலிக்கும்.

விஜய், ஏ.ஆர். ரஹ்மான் சேர்ந்தால் அந்த படத்தை தேனாண்டாள் தயாரித்தால் அந்த படம் அட்லீஸ்ட் ரூ. 300 கோடி வசூலிக்கும் என்றார். அவ்வளவு தான் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துவிட்டனர். இதை பார்த்துவிட்டு பார்த்திபன் விளக்கம் அளித்தார். அவரது பேச்சு மற்றும் விளக்கம் பற்றி நெட்டிசன்கள் கூறியிருப்பதாவது

நீ பாத்த

400 கோடி நீ பாத்த

பணம்

யோ! எவ்வளவுயா பணம் வாங்கண, நாம் தமிழ் மொழியை சினிமா துறையில் அழகாக பேசுபவர் நீங்கள் ஒருவரே, நேற்று உங்கள் மீது மதிப்பு பொய்த்துவிட்டது.

எதுக்கு

தலைக்கோ தளபதிக்கோ வால் பிடிக்கும் வேலை பார்த்திபனுக்கு எதுக்கு...?

அவதார்

விட்டா அவதாரை பீட் பண்ணிடும்னு சொல்லாம போனீங்க..

சிஎம்

CM எல்லாம் கொஞ்சம் ஓவர் தான், உங்களை சொல்லி குத்தம் இல்லை. எல்லாம் பணம் படுத்தும் பாடு.. இடத்துக்கு ஏற்றமாதிரி பேசுவது புத்திசாலிதனமா₹₹₹

English summary
Netizens are still busy trolling actort Parthiban for his extraordinary speech at the Mersal audio launch function.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil