twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏ.ஆர்.ரஹ்மான் காலில் விழுந்த ரசிகை...அனல் பறக்கும் விவாதம்...தீயாய் பரவும் வீடியோ

    |

    சென்னை : ரசிகை ஒருவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. இதை வைத்து நெட்டிசன்கள் அனல் பறக்கும் விவாதத்தையே நடத்தி வருகிறார்கள்.

    முன்னணி இசையப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். உலகின் பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியும் இசையமைத்தும் உள்ளார் ரஹ்மான். இவரை திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் இசைப்புயல் என அன்போடு அழைத்து வருகிறார்கள். ஆஸ்கார் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரஹ்மானை கெளரவிக்கும் விதமாக கனடாவில் தெரு ஒன்றிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    சிரிக்காம சமாளிக்கறது கஷ்டம்தான் போலருக்கே... வித்யூ ராமனின் வேற லெவல் பிரமோ சிரிக்காம சமாளிக்கறது கஷ்டம்தான் போலருக்கே... வித்யூ ராமனின் வேற லெவல் பிரமோ

    யாரு பாத்த வேலைடா இது

    யாரு பாத்த வேலைடா இது

    தற்போது இசை, தயாரிப்பு என பலவற்றிலும் பிஸியாக இருந்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் A.R.Rahman fans என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று தீயாய் பரவி வருகிறது.

    காலில் விழுந்த ரசிகை

    காலில் விழுந்த ரசிகை

    ரஹ்மானை பொது இடத்தில் சந்தித்த ரசிகை ஒருவர், அவரது காலில் விழுந்து ஆசி பெற வேண்டும் என்பது தனது கனவு எனக் கூறி அவரிடம் அனுமதி கேட்டுள்ளார். இதற்கு ரஹ்மானும் ஓகே சொல்ல, அந்த ரசிகை காலில் விழுந்து ஆசி பெற்றதுடன், ரஹ்மானுடன் சேர்ந்து போட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த வீடியோ தான் ரஹ்மான் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ரசிகையின் கனவு நிறைவேறிய தருணம் என்ற கேப்ஷனுடன், ரஹ்மான் சொந்த குரலில் பாடிய ஒரே மதம்...ஒரே கடவுள் என்ற பாடல் வரிகள் ஒலிக்க அந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.

    அனுமதிக்காதீங்க சார்

    அனுமதிக்காதீங்க சார்

    இதை பார்த்த நெட்டிசன்கள், உலகில் அனைவரும் சமம் தான். எதற்காக ரசிகை காலில் விழுவதை ரஹ்மான் அனுமதித்தார். இதை ரஹ்மான் தடுக்காதது தவறு. நீங்கள் மதிப்புமிக்க இடத்தில் இருப்பவர் இது போன்ற செயல்களை அனுமதித்திருக்க கூடாது. ஒரே மதம், ஒரே கடவுள் தான். அதே போல் அனைவரும் சமம் தானே. காலில் விழுவது தவறில்லையா. இறைவனுக்கு மட்டுமே மண்டியிட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமே ரஹ்மான். யாரையும் காலில் விழ அனுமதிக்காதீர்கள் என பலவிதமாக சூடாக கேள்வி எழுப்பி உள்ளனர். ரஹ்மானை பலர் இதற்காக விமர்சித்து வருகிறார்கள்.

    ரஹ்மானின் கனிவு

    ரஹ்மானின் கனிவு

    அதே சமயம் ரஹ்மானை புகழ்ந்தும் அவரது தீவிர ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள். தலைவா இந்த தருணத்திற்கு ஏங்காத நாளில்லை. அந்த பெண் மிகவும் கொடுத்து வைத்தவர். உண்மையான மேதை. அந்த பெண்ணை அவர் வேண்டாம் என தடுக்க தான் செய்கிறார். இருந்தும் அந்த பெண் அன்பாக கேட்டுக் கொண்டதாலேயே அவர் காலில் விழுந்து ஆசி பெற அனுமதித்துள்ளார் ரஹ்மான். அந்த பெண் உங்க காலை தொடும் பொழுது உங்க கண்ணுல தெரியுது பாருங்க சார் அது தான் பயம் கலந்த அன்பு. இந்த பெருந்தொற்று காலத்திலும் ரசிகையின் வேண்டுகோளுக்காக மாஸ்க்கை எடுத்து விட்டு போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்கள். இந்த தன்மையான குணம் தான் அவரை பல சாதனைகள் செய்ய வைத்து, உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

    யாருடா நீங்களாம்

    யாருடா நீங்களாம்

    இன்னும் சிலர் இந்த விவாதங்கள் எதிலும் கலந்து கொள்ளாமல், வீடியோவில் ஒலிப்பது என்ன பாடல். அதன் முதல் வரியை சொல்லுங்கள் என கேட்டுள்ளனர். அற்புதமான தருணம். லவ்லி. டேய் எங்க இருந்துடா வரிங்க நீங்களாம். யாரு எது பண்ணினாலும் அதில் குற்றம் மட்டுமே கண்டுபிடிப்பீங்களா. நல்லது எதுவுமே உங்க கண்ணுக்கு தெரியாதா. ஒரு ரசிகையின் தீவிரமான அன்பு. அதை மதித்து, கனிவை காட்டும் தலைவர் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியவேயில்லையா என சிலர் ஆதங்கத்துடன் கேட்டுள்ளனர்.

    English summary
    A video of a fan falling at the feet of composer AR Rahman and receiving a blessing has spread like wildfire on social media. With this, Netizens have been having a heated debate.This video was shared by A.R.Rahman fans twitter page.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X