அதெப்படி இவர் பொண்ணை மட்டும் எல்லா படத்துலையும் கடத்திடுறாங்க...ஒன்னும் புரியலியே

சென்னை : பீஸ்ட் டிரைலரில் பொண்ணை கடத்திட்டாங்கனுங்கன்னு சொல்ற மினிஸ்டரை எத்தனை பேர் கவனித்தார்கள் என தெரியவில்லை. ஆனால் அவர் யார் என தெரிந்தால் நிச்சயம் குழப்பமடையாமல் இருக்கவே முடியாது.

நேற்று வெளியான பீஸ்ட் டிரைலரை வைத்து ஒரு பக்கம் கொண்டாட்டங்கள் போய் கொண்டிருக்கிறது என்றால், மற்றொரு பக்கம் கழுவி ஊற்றுவதும் குறை சொல்வதும் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் யாரும் கவனிக்காத விஷயங்களைக் கூட நெட்டிசன்கள் மிகவும் நுணுக்கமாக கவனித்து வருகின்றனர்.

இது தான் பீஸ்ட் கதையா

இது தான் பீஸ்ட் கதையா

பீஸ்ட் பட டிரைலரில் ஒரு மாலில் உள்ளவர்களை தீவிரவாதிகள் பிணைய கைதிகளாக பிடித்து வைக்கின்றனர். அவர்களில் மினிஸ்டரின் மகளும், மனைவியும் இருக்கிறார்கள். அரசாங்கத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தூதுவராக அனுப்பப்படுகிறார் செல்வராகவன். அதே சமயம் தீவிரவாதிகள் இருக்கும் அதே மாலில் ரா ஏஜன்டான வீரராகவன் கேரக்டரில் நடிக்கும் விஜய்யும் இருக்கிறார். தீவிரவாதிகளிடம் இருந்து விஜய், மக்களை காப்பாற்றுகிறார் என காட்டப்படுகிறது. இது தான் படத்தின் மொத்த கதையும் என சொல்லப்படுகிறது.

இது தான் கதையோட ட்விஸ்டா

இது தான் கதையோட ட்விஸ்டா

மாலில் சண்டை போடுபவர்கள் இடையே சுரங்கத்தில் சண்டை, ஜெட்டில் பறந்தபடி சண்டை என்றும் காட்டுகிறார்கள். ஒருவேளை அதுதான் கதையின் ட்விஸ்டா என தெரியவில்லை. உலக தரத்திலான இசையை கொண்ட பீஸ்ட் டிரைலர் வெளியான 5 நிமிடத்திலேயே 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது.

இவர் பொண்ணையே கடத்துறாங்க

இவர் பொண்ணையே கடத்துறாங்க

பீஸ்ட் டிரைலரில் மகளை கடத்தி வைத்திருப்பதாக மினிஸ்டர் கேரக்டர் ஒன்று காட்டப்படும். இவர் தான் நெல்சனின் முந்தைய படமான டாக்டர் படத்திலும் தனது பொண்ணை யாரோ கடத்தி விட்டதாக போலீசில் புகார் அளித்து விட்டு, அது பற்றி விபரம் தெரிந்து கொள்ள போலீஸ் ஸ்டேஷக்கு அலையோ அலை என அலைவார். போலீஸ் ஸ்டேஷனில் சிவகார்த்திகேயனிடம் கூட சொல்லி புலம்புவார். அதே நபர் தான் பீஸ்ட்டிலும் பொண்ணை கடத்தி விட்டதாக புலம்புகிறார்.

ஏன் இத்தனை சொதப்பல்கள்

ஏன் இத்தனை சொதப்பல்கள்

பீஸ்ட் டிரைலர் பல படங்களின் காப்பி, பல இடங்களில் லாஜிக் இடிக்கிறது என்று இதுவரை சொல்லி வந்தார்கள். இதை எல்லாம் எப்படி நெல்சன் திலீப்குமார் கவனிக்காமல் விட்டார் என கேட்டு வந்த நெட்டிசன்கள் தற்போது, நெல்சன் படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் மட்டும் தான் மாறிகிட்டே இருக்காங்க. மற்றபடி துணை நடிகர்களாக குறிப்பிட்ட சிலரை மட்டுமே நெல்சன் பயன்படுத்தி வருகிறார்.

வேற ஆளே கிடைக்கலியா

வேற ஆளே கிடைக்கலியா

இந்த மினிஸ்டர் கேரக்டர் மட்டுமல்ல யோகிபாபு, கிங்ஸ்லே போன்றவர்களும் நெல்சன் இதுவரை இயக்கிய அனைத்து படங்களிலும் நடித்துள்ளனர். இதனால் நடந்த குழப்பம் தான் மினிஸ்டர் கேரக்டரும். இதை பார்த்த நெட்டிசன்கள், அதெப்படி இவர் பொண்ணை மட்டும் எல்லா படத்திலும் கடத்தி விடுகிறார்கள் என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X