ராஜு சொன்ன அந்த க்ளோஸ் ஃபிரண்ட் யார்... வீடியோவை கண்டுபிடித்து வைரலாக்கிய நெட்டிசன்கள்

சென்னை : பிற மொழிகளில் இருந்த பல நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்களை தமிழில் நடத்தி வருகிறார்கள். அவற்றில் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிகப் பெரிய வரவேற்பையும், வெற்றியையும் அடைந்துள்ள ஷோ, பிக்பாஸ்.

Recommended Video

ராஜு சொன்ன அந்த க்ளோஸ் ஃபிரண்ட் யார்... வீடியோவை கண்டுபிடித்து வைரலாக்கிய நெட்டிசன்கள்

இதன் நான்கு சீசன்கள் முடிந்து, தற்போது ஐந்தாவது சீசன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விட்டது. இந்நிலையில் அடுத்து வெளியேற போவது யார், டைட்டிலை வெல்ல போவது யார் என்பது போன்ற பல எதிர்பார்ப்புக்கள் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

வெளியேறிய அபிஷேக்

வெளியேறிய அபிஷேக்

18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிகழ்ச்சியில் 21 வது நாளிலில் எலிமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா, 47 வது நாளில் வைல்ட் கார்டு என்ட்ரியாக மீண்டும் வந்தார். மீண்டும் 64 வது நாளில் எலிமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்டார். அவர் கிளம்புவதற்கு முன், மற்ற போட்டியாளர்கள் அவருக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என கமல் கேட்டார்.

ராஜு சொன்ன அட்வைஸ்

ராஜு சொன்ன அட்வைஸ்

அப்போது பேசிய ராஜு, ஐந்து- ஆறு வருடங்களுக்கு முன் என் ஃபிரண்ட். க்ளோஸ் ப்ரண்ட் ஒருவர் என்னிடம் சொன்னதை நான் உனக்கு சொல்கிறேன். One day. one fine day. It will be your day. அந்த நாளுக்காக காத்திரு என்றார். ராஜுவின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள், பெயரை சொல்லாமல் ராஜு சொன்ன அந்த க்ளோஸ் ஃபிரண்ட் யார் என கேள்வி கேட்க துவங்கினர்.

இவர் தான் அந்த க்ளோஸ் ஃபிரண்டா

இவர் தான் அந்த க்ளோஸ் ஃபிரண்டா

ஒரு வழியாக யோசித்து அவர் யார் என்பதை கண்டும்பிடித்து விட்டனர் நெட்டிசன்கள். அந்த க்ளோஸ் ஃபிரண்ட் வேறு யாரும் இல்லை. பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான கவின் தானாம். அவர் தான், விஜய் டிவி.,யில் 2015 ம் ஆண்டு நடத்தப்பட்ட சமையல் சமையல் நிகழ்ச்சியின் போது ராஜுவிடம் இந்த டயலாக்கை தான் அடிக்கடி சொல்வதாக கூறினார்.

வைரலாக்கிய நெட்டிசன்கள்

இந்த டயலாக்கை கேட்டதும் பாகுபலி ரேஞ்சில் தன்னை நினைத்துக் கொள்வான் ராஜு என கலாய்த்தார் கவின். இந்த வீடியோ க்ளிப்பிங்கை தேடிபிடித்து எடுத்துள்ள நெட்டிசன்கள், தற்போது அபிஷேக்கிற்காக ராஜு பேசிய வீடியோ இரண்டையும் இணைத்து, இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

விஜய் டிவி.,யில் தயாரிப்புக்கள்

விஜய் டிவி.,யில் தயாரிப்புக்கள்

பிக்பாஸ் சீசன் 3 ன் போது லாஸ்லியாவுடனான காதலால் பிரபலமாக பேசப்பட்டவர் கவின். இதே போல் தற்போதைய சீசனின் வலிமையான போட்டியாளராக பார்க்கப்படுபவர் ராஜு. இவர்கள் இருவருமே விஜய் டிவி.,யில் தொகுப்பாளர்களாக இருந்து, சின்னத்திரை நடிகர்களாகி, அசிஸ்டென்ட் டைரக்டர் ஆகி, தற்போது பிரபலமான நடிகர்களாகவும் வளர்ந்து வருகிறார்கள்.

இதெல்லாம் நடந்திருக்கா

இதெல்லாம் நடந்திருக்கா

இருவருமே விஜய் டிவி.,யின் தயாரிப்புக்கள், நெருங்கிய நண்பர்கள் என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையேயான உறவு அவ்வளவு சரியாக இல்லையாம். இருந்தாலும் கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து ராஜு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் பேசியதை குறிப்பிட்டதை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள். அதே சமயம் கவின், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்த போது அவரை பற்றி ராஜு, மீடியாக்களில் மோசமாக பேசியதை குறிப்பிட்டு சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X