Vijay Campaign: விஜய் சொன்னதை விஜய்யே பின்பற்றல.. இவ்வளவு பேர் செத்துப்போயிட்டாங்களே.. கடவுளே!
கரூர்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று அதாவது செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு அவரைக் காண் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தார்கள். இப்படி இருக்கும்போது இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 38 போர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த துக்க நிகழ்வுக்கு காரணமே விஜய் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் காவல் துறை அறிவுருத்தலை பின் பற்றாததுதான் காரணம் என்று பலரும் பேசி வருகிறார்கள்.
இன்று சுற்றுப் பயணத்தில் அவர் காலை 8.45 மணிக்கு நாமக்கலில் பேச அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அவர் தனது சென்னை வீட்டில் இருந்தே காலை சுமார் 8 மணிக்குத்தான் விமனநிலையத்திற்கு புறப்பட்டார். காலை 8.45 மணிக்கு நாமக்கலில் உரையாற்ற அவர் வீட்டில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டுள்ளார் என்றாலே, விஜய் வேண்டும் என்றே மெத்தனமாக காலையில் தனது பயணத்தைத் தொடங்கி உள்ளார் என்ற விமர்சனம் எழுந்து வருகிறது.

விஜய்யே பின்பற்றவில்லை: இது மட்டும் இல்லாமல் அவர் தனது கட்சித் தொண்டர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றச் சொல்லி அறிவுறுத்தி உள்ளார். ஆனால் அதை அவரே பின்பற்றவில்லை. அப்படி இருக்கும்போது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் எப்படி பின் பற்றுவார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நினைத்து பலரும் வருத்தத்தில் உள்ளார்கள். இது மட்டும் இல்லாமல், மேலும் பலி எண்ணிக்கை உயருமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது. அதே நேரத்தில் பலி எண்ணிக்கை உயர கூடாது என்று பிராத்தனைகளிலும் பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.

விஜய் காரணமா?: இந்த சோக நிகழ்வுக்கு முழுக்காரணம் விஜய் தான் என்று விமர்சிப்பவர்களும் உள்ளார்கள். மதியம் 12 மணி வாக்கில் கரூரில் அவருக்கு பேச அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அவர், மாலை சுமார் 7 மணி வாக்கில்தான் அங்கு வந்து சேர்ந்தார். ஒருவேளை காவல்துறை சொன்ன நேரத்திற்கு அவர் வந்திருந்தால் வெளிச்சத்தில் இவ்வளவு பெரிய சோக நிகழ்வு நடக்க வாய்ப்புகள் குறைவு என்றும் பேசி வருகிறார்கள். தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உட்பட பல அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் என பலரும் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று, நிலையை கண்காணித்து வருகிறார்கள். முதலமைச்சரும் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











