பாவனிக்கு குறும்படம் ரெடி...பிக்பாஸ் வேலையை பார்க்கும் ரசிகர்கள்
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 துவங்கி மூன்று வாரங்கள் கடந்து விட்டது. இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். ஆனால் இதுவரை ஒரு குறும்படம் கூட போட்டுக் காட்டப்படவில்லை.
முந்தைய சீசன்களை ஒப்பிடுகையில் பிக்பாஸ் கவனிக்கிறாரோ இல்லையோ, அதை விட ரொம்ப உன்னிப்பாக ரசிகர்கள் கண்காணித்து வருகிறார்கள். இதனால் தினசரி நிகழ்வுகளை வைத்து பலரையும் கமெண்ட்டுகளில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

காயினை திருடிய சுருதி
திங்கட்கிழமை எபிசோடில், காயின் வைத்திருப்பவர்கள் அதன் பவரை பயன்படுத்தி எவிக்ஷனில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்தார். இதனால் தாமரையின் காயினை திருடி, அதை கேமிரா முன் காட்டி தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார் சுருதி.

பொய் சொல்லும் பாவனி
நேற்றைய எபிசோடில் சுருதி, பாவனியின் உதவியுடன் தாமரையிடம் இருந்த காற்று நாணயத்தை திருடுகிறார். இது வீட்டிற்குள் மிகப் பெரிய பிரச்சனையாக வெடிக்கிறது. ஆனால் மற்ற ஹவுஸ்மேட்கள் கேட்கும் போது தான் சுருதிக்கு உதவி செய்யவில்லை. அவள் எடுத்தது கூட தனக்கு தெரியாது என்று பொய் சொல்கிறார் பாவனி.

பாவனிக்கு குறும்படம் ரெடி
இந்நிலையில் இந்த காட்சியை வைத்து நெட்டிசன்கள் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளனர். தாமரை உள்ளிட்ட அனைவரின் முன்னிலையிலும் தான் உதவி செய்யவில்லை என பாவனி பேசியதையும், எனக்கு உதவி செய் என சுருதி கேட்கும் போது பாவனி ஓகே உதவி செய்கிறேன் என சொல்வதையும் இணைத்து இந்த குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கமலை கேள்வி கேட்கும் ரசிகர்கள்
தாமரையை திசை திருப்ப பாவனி ஒப்புக் கொண்டதை வீடியோ க்ளிப்பிங் அடங்கிய இந்த குறும்படம் இணையத்தில் பரவி செம வைரலாகி வருகிறது. இந்த குறும்படத்தை வேகமாக பகிர்ந்து வரும் பிக்பாஸ் ரசிகர்கள், இதை வைத்து கமல், பாவனியை கேள்வி கேட்பாரா. இந்த குறும்படத்தை பாவனிக்கு போட்டுக் காட்டுவாரா, இந்த சீசனின் முதல் குறும்படம் பாவனிக்கு போடப்படுமா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

பிரியங்காவிற்கும் குறும்படம்
இதே போல் கடந்த வாரமும் பிரியங்காவிற்காகவும் ரசிகர்கள் ஒரு குறும்படம் உருவாக்கி இருந்தனர். இதை வைத்து பிரியங்காவை கமல் கேள்வி கேட்க வேண்டும் எனவும் மிக அழுத்தமாக வலியுறுத்தி கமெண்ட் செய்தனர்.


Click it and Unblock the Notifications











