Don't Miss!
- News
சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டர் தண்ணீர் தொட்டியில் ஊழியர் மரணம்.. 7 நாட்களாக கிடந்த சடலம்
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Lifestyle
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கோயிலில் விளக்கேற்றி வழிபட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...இதை யாராச்சும் கவனிச்சீங்களா?
சென்னை : ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்திய போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். காமாட்சி எப்போதும் காப்பாற்று என ஐஸ்வர்யா பதிவிட்ட போஸ்ட் செம வைரலானது.
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஐஸ்வர்யா கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய அதே சமயத்தில், தனுஷ் நடித்த முதல் ஹாலிவுட் படமான The Gray Man படமும் உலகம் முழுவதும் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது.இதனால் தனுஷ் படம் நன்றாக ஓட வேண்டும் என வேண்டிக் கொள்ளத் தான் ஐஸ்வர்யா கோயிலுக்கு சென்றாரா என சிலர் கேள்வி எழுப்பினர்.
தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் அடுத்தடுத்து ஓடிடி.,யில் ரிலீசாகின. ஆனால் இவைகள் அனைத்தும் படுதோல்வி அடைந்தன. இதனால் The Gray Man படம் தனுஷிற்கு கைகொடுக்குமா என ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த படமும் நெகடிவ் விமர்சனங்களையே அதிகம் பெற்றுள்ளது. இதனால் அடுத்து தனுஷ் நடித்து வரும் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்களைத் தான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து கலக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.
தனுஷ்
டிரெண்டிங்கை
தவிடு
பொடியாக்கிய
சூர்யா..
கொஞ்ச
நேரம்
கூட
நீடிக்காத
தி
கிரேமேன்
கூஸ்பம்ப்ஸ்!

மீண்டும் இணைய போகிறார்களா
ஜனவரி மாதம் பிரிவை அறிவித்த தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும், சமீபத்தில் ரகசியமாக சந்தித்துக் கொண்டதாகவும், தனுஷ் பிறந்தநாளன்று இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டதாக அறிவிக்க போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் ஐஸ்வர்யாவோ, தனுஷுடன் போட்டி போட்டி மகன்களுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு வருவதாக நெட்டிசன்கள் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

விளக்கேற்றினது ஒரு குற்றமா
இந்த சமயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேற்று கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டுள்ளார். இதில் அவர் விளக்கேற்றிய போட்டோக்களை கவனித்து விட்டு, ரசிகர்கள் புது புது கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதாவது அந்த போட்டோக்களில் ஐஸ்வர்யா நெய் விளக்கு ஏற்றுகிறார். அதுவும் தானியத்தை பரப்பி விளக்கு ஏற்றுவதாக உள்ளது. இந்துக்கள் பொதுவாக நவகிரக தோஷம் போக்க, நவ தானியங்களால் விளக்கு ஏற்றுவார்கள். என்ன பிரச்சனையோ அது சரியாக, அதற்கு பரிகாரம் செய்யும் விதமாக நவகிரகங்களுக்கு, அந்தந்த கிரகத்திற்குரிய தானியத்தின் மீது விளக்கு ஏற்றுவார்கள்.

இதுல இவ்வளவு இருக்கா
ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள போட்டோவில் விளக்கிற்கு அடியில் இருப்பது துவரையா அல்லது கொள்ளா என்பது தான் நெட்டிசன்களின் பெரிய சந்தேகமாக உள்ளது. துவரை என்றால் அது செவ்வாய் கிரகத்திற்குரியது. பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம் பெறுவதற்காக தான் துவரை மீது விளக்கேற்றி வழிபடுவார்கள். ஒருவேளை அது கொள்ளு என்றால் அது கேதுவிற்கு உரியது. வறுமை, வியாதிகள் நீங்குவதற்காக கொள்ளு தானியத்தால் விளக்கேற்றுவார்கள்.

சந்தேகங்களை கிளப்பும் நெட்டிசன்கள்
இதில் எந்த பலனை பெறுவதற்காக ஐஸ்வர்யா இத்தனை விளக்குகளை ஏற்றி உள்ளார். சாதாரணமாக விளக்கு ஏற்றாமல் ஏன் பரிகாரம் செய்வதை போல் தானியத்தில் விளக்கு ஏற்றி உள்ளார். ஐஸ்வர்யாவிற்கு அப்படி என்ன பிரச்சனை அல்லது வேண்டுதல். இது அவருக்காகவா அல்லது மற்றவர்களுக்காகவா. இந்த பலன்களின் அடிப்படையில் பார்த்தால் வறுமை, வியாதி அவருக்கு இருக்க வாய்ப்பே இல்லை. அப்படியானால் பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம் பெறுவதற்காக தான் விளக்கு ஏற்றி வழிபட்டாரா.
Recommended Video

எப்படி உங்களுக்கு மட்டும் தோணுது
ஐஸ்வர்யா யாரை பகையாக நினைக்கிறார். ஒன்றும் புரியவில்லையே என நெட்டிசன்கள் இதை வைத்து பெரிய ஆராய்ச்சியே நடத்தி பல ஆன்மிக தகவல்களைச் சொல்லி, பல விதமான சந்தேகங்களையும் எழுப்பி உள்ளனர்.இதை பார்த்த மற்றவர்கள் ஆச்சரியத்துடன், அடபாவிங்களா...உங்க கண்ணுக்கு மட்டும் எப்படிடா இதெல்லாம் படுது. ஒரு விளக்கேற்றியதை வைத்து இப்படி ஒரு ஆராய்ச்சிய நடத்தி, குழப்பத்தை கொளுத்தி போட்டிருக்கீங்களே என ஆதங்கத்துடன் கேட்டு வருகின்றனர்.