For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தாத்தா ரியோவை வச்சு செய்யாம விட மாட்டாரு போல இருக்கே.. புரமோவை பார்த்தே வெறியாகும் நெட்டிசன்ஸ்!

  |

  சென்னை: போன வாரத்தில் இருந்தே பிக்கப் ஆன பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வார தொடக்கத்தில் இருந்தே ரசிகர்களின் ரசனைக் கேற்ப களமாடி வருகிறது.

  அக்டோபர் 4ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி, 16 போட்டியாளர்களுடன் முதல் இரண்டு வாரத்தை வெற்றிகரமாக கடந்தது.

  நடிகை ரேகா கடந்த ஞாயிறன்று எலிமினேட் ஆனதும், அவருக்கு மாற்றாக அர்ச்சனா வந்ததும் போன வாரம் ஹைலைட்டுகள்.

  ஆடாமல் அசையாமல் இருக்கும் ரியோ.. முத்தம் கொடுக்க கிட்ட போன ஜித்தன் ரமேஷ்.. எல்லை மீறிய சுரேஷ்!

  எதிர்பார்த்தபடியே

  எதிர்பார்த்தபடியே

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் முதல் ஆளாக நடிகை ரேகா வெளியேறினார். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இந்த முறையும் வயதானவரையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதலாவதாக வெளியேற்றினார்கள். ஞாயிற்றுக் கிழமை எபிசோடுக்கு முன்னதாக வெள்ளிக்கிழமையே இந்த விஷயம் கசிந்ததால், சன் டே எபிசோடு கொஞ்சம் போரிங் ஆனது.

  Rio விடம் மல்லுக்கட்டிய Anitha | எனக்கு மரியாதையே இல்ல Day 15
  சூடு பிடிக்கிறது.

  சூடு பிடிக்கிறது.

  இந்நிலையில், திங்கட் கிழமையே இந்த வாரத்திற்கான எலிமினேஷன் வேட்டையை தொடங்கி நிகழ்ச்சியை மறுபடியும் சூடு பிடிக்க வைத்து விட்டார் பிக் பாஸ். ஆரிக்கும், சுரேஷுக்கும் அதிகப்படியான ஓட்டு விழுந்து, இந்த வாரத்தில் எப்படியாவது தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள சூடான சுவையான மோதல்கள் நடந்தேறின.

  இன்னைக்கு சம்பவம் இருக்கு

  இன்னைக்கு சம்பவம் இருக்கு

  நேற்று பிக் பாஸ் வீட்டில் மோதல்கள் வெடித்த நிலையில், இன்று அடுத்ததாக ஆடாமல் அசையாமல், சிரிக்காமல் சிலை போல இருக்க வேண்டும் என்கிற டாஸ்க்கை உருவாக்கி வேற லெவல் சம்பவத்தை ஆரம்பித்து வைக்கிறார் பிக் பாஸ். வெளியான புரமோ வீடியோவை எல்லாம் பார்த்த ரசிகர்கள், இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  பின்றியே டா

  பின்றியே டா

  தலையில நீண்ட ஜடா முடி விக்கெல்லாம் வைத்துக் கொண்டு, நாக்கை நீட்டி கண்ணை உருட்டி அப்படியே மன்சூர் அலிகான் போல மாறி ஒவ்வொரு புரமோவிலும் எக்ஸ்ட்ராடினரி எனர்ஜியுடன் அசத்தும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு அந்நியன் பட மீமை போட்டு, பின்றியே டா என ரசிகர்கள் அவரை வியந்து பார்த்து வருகின்றனர்.

  பிக் பாஸை கலாய்த்த மொட்டை பாஸ்

  பிக் பாஸை கலாய்த்த மொட்டை பாஸ்

  பிக் பாஸை வெளியே இருக்கும் ரசிகர்கள் நாரதர், நம்பியார், சகுனி என கலாய்ப்பது வழக்கம். பிக் பாஸின் ரெகுலர் ரசிகரான சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டுக்கு உள்ளே போய், மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு எல்லாத்தையும் சத்தமா சொல்லி வருவது ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது. நேற்று, யப்பா.. சரியான விஷம்ப்பா நீ என பிக் பாஸை சுரேஷ் கலாய்த்ததை வைத்து உருவான கே.ஜி.எஃப் பட மீம் தீயாக பரவி வருகிறது.

  உனக்கு வாய் சரியில்ல மொட்டை

  உனக்கு வாய் சரியில்ல மொட்டை

  அரக்கன் வேஷம் போட்டுக் கொண்டு படு டெரர் ஆக இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தியை தான் ரசிகர்கள் ரசித்து பார்த்தும், பங்கமாக கலாய்த்தும் வருகின்றனர். கேமராவை பார்த்து நான் தான் அரக்கன் என சுரேஷ் சொல்லும் காட்சியை போட்டு, உனக்கு வாய் சரியில்ல மொட்டை என ஓவராக ஓட்டியுள்ளனர்.

  ஜால்ரா நிஷா

  ஜால்ரா நிஷா

  "ரியோவுக்கு இம்சை அரசன் புலிகேசி கெட்டப் குடுத்தாங்க ஓகே.. நிஷாவுக்கு நம்ம இளவரசு அமைச்சர் கெட்டப் குடுத்துருந்தா sarcasmஆ இருந்துருக்கும் நிஷாவும் நல்ல ஜால்ரா அடிச்சுட்டு சுத்திட்டு இருந்துருக்கும் ஐடியா இல்லாத பசங்க" என இந்த பிக் பாஸ் ரசிகர், நிஷாவின் ஜால்ரா தனத்தை வெளுத்து வாங்கி உள்ளார்.

  இன்னைக்கு ரியோ தான் ஆடு

  இன்னைக்கு ரியோ தான் ஆடு

  இம்சை அரசன் கெட்டப் போட்டாலும் போட்டார், இன்னைக்கு எல்லாருமே ரியோ ராஜை வச்சு செய்றாங்க, தொடர்ந்து சில நாட்களாக ரியோ ராஜ் ஓவர் ஆட்டிட்யூட் காட்டுகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களும் ரியோவை சுரேஷ் கலாய்ப்பதே பார்த்து ரசித்து வருகின்றனர்.

  English summary
  Bigg Boss Tamil fans shares more their views and reactions for today promos and they troll Rio Raj and Suresh Chakaravarthy for their performances.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X