சுட சுட பிரியாணியுடன் ரம்ஜான் வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா... நெட்டிசன்ஸ் கேட்ட கேள்விய பாருங்க?

சென்னை : சுட சுட, மணக்க மணக்க பிரியாணி, மட்டனுடன் ரம்ஜான் பண்டிகை வாழ்த்து பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால் அதை விட அவரிடம் நெட்டிசன்கள் கேட்டுள்ள கேள்வி தான் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

புதிய படம் இயக்குவதில் பிஸியாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். பாலிவுட், கோலிவுட் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்க ஐஸ்வர்யா கதை உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். அதோடு சோஷியல் மீடியாவிலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ஐஸ்வர்யாவின் போஸ்ட்

ஐஸ்வர்யாவின் போஸ்ட்

தனது சமூக பணிகள், ஒர்க் அவுட் என அனைத்தையும் போட்டோவாக பதிவிட்டு வருகிறார். தினமும் அன்றைய தினத்தில் என்ன ஸ்பெஷல் என்பதற்கு ஏற்ப போட்டோ பதிவிட்டு வருகிறார். வேர்க்க விறுவிறுக்க சைக்கிளிங் செய்வது, ஷட்டில் விளையாடுவது, ஜாக்கிங் செல்வது, ஒர்க் அவுட் செய்வது என தினம் ஒரு புது புது கருத்துடன் புதிய போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

பிரியாணியுடன் வாழ்த்து

பிரியாணியுடன் வாழ்த்து

இந்த நிலையில் இன்று ரம்ஜான் என்பதால், பிரியாணி, மட்டன், ஸ்வீட் என பலவகையான அயிட்டங்கள் இருக்கும் போட்டோவை பதிவிட்டு, ரியாஸிற்கு ரம்ஜான் வாழ்த்தும், இந்த பிரியாணியை அனுப்பியதற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா. ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் பிரியாணி கொடுத்தனுப்புவது மிஸ் பண்ண முடியாது. எனக்கு பிடித்த ஸ்வீட் உங்கள் மனதை போலவே இனிப்பாக என கூறி உள்ளார்.

என்ன கேட்டிருக்காங்க பாருங்க

என்ன கேட்டிருக்காங்க பாருங்க

ஐஸ்வர்யாவின் இந்த பதிவை ஏராளமானோர் லைக் செய்து, கமெண்ட் செய்து வருகின்றனர். இதில் பலர், எங்களுக்கு எல்லாம் கிடையாதா. அதில் முட்டை மிஸ் ஆகுதே என கூறி உள்ளனர். அதை விட பெரும்பாலானவர்கள், தலைவர் எப்படி இருக்கிறார். அவருடைய ரீசன்ட் போட்டோ போஸ்ட் போடுங்க. பார்க்கனும் போல இருக்கு. அக்கா, தலைவர் எப்படி இருக்கார், மேடம்...தலைவர் எப்படி இருக்கார் என்று தான் அதிகமானவர்கள் கேட்டுள்ளனர்.

Recommended Video

Rajkamal | Latha Rao | எங்க வீட்டு Bathroom கதை | Filmibeat Tamil
கலாய்த்த நெட்டிசன்கள்

கலாய்த்த நெட்டிசன்கள்

பிரியாணி கேட்டவர்களை விட ரஜினியை பற்றி கேட்டவர்கள் தான் அதிகம். ரஜினி மீது ரசிகர்கள் வைத்துள்ள பாசம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதே சமயம் இன்னும் சிலர் ஐஸ்வர்யாவை கிண்டல் செய்து, ஒர்க் அவுட் பண்ணினது எல்லாம் வீணா போச்சே. இது என்ன டயட் சாப்பாடா அக்கா என கேட்டு வருகின்றனர். ஐஸ்வர்யாவின் போஸ்டை விட, அதற்கு வரும் கமெண்ட்ஸ் செம சுவாரஸ்யமாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X