»   »  ராசதந்திரம்லே..! - சினிமா இருந்தாதான அங்கேயிருந்து அரசியலுக்கு வருவீங்க

ராசதந்திரம்லே..! - சினிமா இருந்தாதான அங்கேயிருந்து அரசியலுக்கு வருவீங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக அரசு, திரைப்படங்களுக்கு 10% கேளிக்கை வரி முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என அறிவித்தது. இதற்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்யக்கோரி தியேட்டர் ஊழியர்கள் சிலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கேளிக்கை வரி விதிப்பால் அரசுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் திரைத்துறையினரையும், திரையரங்க உரிமையாளர்களையும் சமாதானம் செய்யும் பொருட்டு, தமிழக அரசு, சினிமா டிக்கெட் விலையை 25% அதிகரித்துக்கொள்ள தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

இன்னும் டிக்கெட் கட்டணத்தை அதிகரித்தால் பெரும்பான்மையானோர் தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பதை விடுத்து பைரசி தளங்களை நாடுவதைத் தவிர்க்க முடியாது.

அண்ணாமலை மொமென்ட்

சினிமா டிக்கெட் விலையை ஏத்த போறாங்களாம்... வித்-அவுட்ல போறவனுக்கு செக்கிங் மட்டும்தான்டா பிரச்சனை! பாறைடா தமிழ்ராக்கர்ஸ் பாறை! தட் மலைடா அண்ணாமலை மொமென்ட்.

இதுதான் நிலைமை

'சினிமா விமர்சனம் பண்றவங்க மட்டும் தான் இனிமே படம் பார்ப்பாங்க போல..!' என டிக்கெட் உயர்வால் நிலவும் இன்றைய நிலைமையைக் கூறியுள்ளார் உதவி இயக்குநர் ஒருவர்.

பாட்ஷா மொமென்ட்

தமிழ் ராக்கர்ஸ் ரசிகர்கள் இப்படித்தான் இருப்பாங்க... 'தியேட்டர்ல டிக்கெட் விலை கூடிருச்சாம்..!' - 'கூடட்டும்..!'

பைரசி சைட்

ஸ்மார்ட் போன் யூசர்ஸ் : எங்களுக்குனு இருக்குற ஒரே வெப்சைட் இவன்தான்... இவன் இருக்கும்போது நாங்க ஏன் தியேட்டருக்கு போகணும்?

தமிழக அரசு ஐடியா

சினிமா இருந்தா தான எல்லாரும் அரசியலுக்கு வரேனு சொல்றானுக... சினிமாவையே அழிச்சுட்டா.., ராசதந்திரம்ல! - தமிழக அரசு திட்டமிட்டே செய்வதாக ஒருவர் கலாய்த்திருக்கிறார்.

English summary
Tamilnadu Government has given the permission to increase the cinema ticket price by 25%. 'So, the fans go to the piracy websites and watch the movie.' netizens says.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil