இது என்ன புது தகவல்...10 வருடங்களுக்கு முன்பே நாய் சேகருக்கு தயாராகி விட்டாரா சதீஷ் ?

சென்னை : காமெடியன் சதீஷ் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள படம் நாய் சேகர். பொங்கலை முன்னிட்டு இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் இதை வைத்து மீம்களையும் போட்டு சோஷியல் மீடியாவை தெறிக்க விட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

Recommended Video

Naai Sekar Movie Review | Yessa ? Bussa ? | Sathish | Pavithra Lakshmi | Filmibeat Tamil

காமெடியனாக பல ஆண்டுகள் நடித்து, பிரபலமாகி இருந்தாலும் ஹீரோவாக முதல் படத்தில் நடித்துள்ளார் சதீஷ். இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ர லட்சுமி, லிவிங்ஸ்டன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாயை மையமாக வைத்து முழு நீள காமெடி, என்டர்டைன்மென்ட் படமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

 வரவேற்பை பெற்ற நாய் சேகர்

வரவேற்பை பெற்ற நாய் சேகர்

முதல் நாளே மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது நாய் சேகர் படம். இந்த படத்திற்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் ரேசில் பங்கேற்ற படங்களில் நாய் சேகர் அதிகமானவர்களை கவர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாராட்டுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இதை வைத்து மீம்களும் அதிகம் உருவாக்கப்பட்டு, இணையத்தை கலக்கி வருகின்றன.

பிரபலமாகும் நாய் போஸ்

பிரபலமாகும் நாய் போஸ்

நாய் சேகர் படத்திற்காக நாயை போல் போஸ் கொடுத்து ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட போட்டோ, நாய் சேகர் படக்குழுவினர் பொங்கல் ஸ்பெஷல் ஷோவின் போது எடுத்துக் கொண்ட போட்டோ ஆகியன அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதோடு, சதீஷ் நடித்த பழைய படம் ஒன்றின் போட்டோவும் அதிமாக உலா வருகிறது.

அப்போவே ப்ரொமோஷனா

அப்போவே ப்ரொமோஷனா

2012 ம் ஆண்டு சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமான மெரினா படத்தில் வரும் ஒரு சீனில், சிவகார்த்திகேயனும், சதீஷும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது அவர்கள் அருகில் ஒரு நாய் படுத்திருக்கும். இந்த போட்டோவை தற்போது ட்விட்டரில் பகிர்ந்து, 10 வருடங்களுக்கு முன் மெரினா படத்தில் நடித்த போதே நாய் சேகர் படத்தின் ப்ரோமோஷனை சதீஷ் துவக்கி விட்டாரா என கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆச்சரியப்படும் ரசிகர்கள்

ஆச்சரியப்படும் ரசிகர்கள்

இதை பார்த்த ரசிகர்கள், எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க. சதீஷ் எப்பவோ நடித்த படத்தின் போட்டோவை தேடி எடுத்து, அதை நாய் சேகர் படத்தில் இணைத்து கமெண்ட் செய்து கலக்கி வருகிறார்களே என பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X