ஆமாம்.. ஷாருக்கானுக்கு கொரோனாவாச்சே.. எப்படி நயன்தாரா திருமணத்திற்கு வந்தார்?

சென்னை : பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா பாதித்த நிலையில், எப்படி நயன்தாரா திருமணத்திற்கு வந்தார் என்ற சர்ச்சையை ரசிகர்கள் கிளப்பி உள்ளனர்.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கோலாகலமாக நேற்று நடைபெற்றது.

திருமணத்துக்காக 3 நாட்களுக்கு அந்த ஓட்டல் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருந்தது. பார்க்கும் இடம் எல்லாம் பிரமாண்டமாக விசேஷ கண்ணாடியாலும், ரம்மியமான மலர்களாலும் மேடை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

மெஹந்தி விழா

மெஹந்தி விழா

மெஹந்தி விழாவுடன், கோலாகலமாக தொடங்கிய திருமண விழாவில், நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். திருமண நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

விவிஐபிக்கள்

விவிஐபிக்கள்

இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இயக்குநர் மணிரத்னம், சரத்குமார், விஜய் சேதுபதி, கார்த்தி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அட்லி, நெல்சன், பொன்வண்ணன், கேரள நடிகர் திலீப், விஜய், அஜித்தின் மனைவி ஷாலினி மகன், மகளுடன் கலந்து கொண்டார்.

திருமண புகைப்படம்

திருமண புகைப்படம்

திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் கொண்டுவரக்கூடாது என்றும் திருமண அழைப்பிதழ் உடன் ஒரு கோட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கோடை காண்பித்த பின்னரே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இப்படி ஏகப்பட்ட கன்டிஷனுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் தடபுடலாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்து மதியத்திற்கு மேல் தான் திருமண புகைப்படமே விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

Recommended Video

Nayanthara Wedding | முதியோர் இல்லத்திற்கு விருந்தளித்து அசத்தல்! *Celebrity | Filmibeat Tamil
சர்ச்சையை கிளப்பிய ரசிகர்கள்

சர்ச்சையை கிளப்பிய ரசிகர்கள்

இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஷாருக்கான் கொரோனா பாதித்த நிலையில், எப்படி நயன்தாரா திருமணத்திற்கு வந்தார் என்ற சர்ச்சையை ரசிகர்கள் கிளப்பி உள்ளனர். ஷாருக்கான் மட்டும் 4 நாட்களில் கொரோனாவிலிருந்து குணமடைந்துவிடுவாரா என்றும், தனியாக இருக்கனும், மாஸ் போடவேண்டும் பொதுமக்களை வலியுறுத்தும் நிலையில், பெரிய நடிகர்களுக்கு இது எதுமே இல்லையா என்று நெட்டிசன்கள் ஷாருக்கானை கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X