Arasan: அரசன் ப்ரோமோ ரிலீஸ் செய்வதில் இப்படி ஒரு சிக்கலா? மண்டை மேல இருந்த கொண்டையை மறந்த மொமெண்ட்!

சென்னை: நடிகர் சிம்பு தற்போது வெற்றி மாறன் உடன் இணைந்து அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, வெற்றி மாறன் இயக்குகிறார். படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக படம் வட சென்னை கால கட்டத்தில் நடக்கும் மற்றொரு கதை என்பதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தின் புரோமோ நாளை தியேட்டரிலும் நாளை மறுநாள் யூடியூபிலும் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தற்போது படக்குழு மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டாங்களே என்று நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

அரசன் படம் வடசென்னை படத்தின் யுனிவர்ஸ் உடன் இணைந்து வருகிறதா? இல்லையா என்பது குறித்து ப்ரோமோ ரிலீஸ் ஆகும்போது தெரியவரலாம் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளார்கள். படத்தின் ப்ரோமோ தமிழ்நாடு முழுவதும் சுமார் 15 முதல் 20 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. இது மட்டும் இல்லாமல், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவிலும் ப்ரோமோவை தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது.

Netizens Trolls Asrasan Movie Team Before Movie Promo Release Goes Trending

இப்படி இருக்கும்போது மண்டை மேல உள்ள கொண்டையை படக்குழு மறந்து விட்டது என்று இணையவாசிகள் கிண்டல் அடித்து வருகிறார்கள். அதாவது நாளை தியேட்டரில் ப்ரோமோவைப் பார்க்கும் ரசிகர்கள், அதை தங்களது சமூக வலைதளங்களில் கட்டாயம் பகிர்வார்கள். அப்படி இருக்கும்போது இந்த படத்தின் ப்ரோமோவானது சமூக வலைதளங்களில் லீக் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. இப்படி இருக்கும்போது நாளை மறுநாள் யூடியூபில் ப்ரோமோ வெளியாகும் போது அதன் வியூவ்ஸ் எந்த அளவுக்கு இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. இதைத்தான் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் ப்ரோமோவைப் பார்க்க, ரூபாய் 15 கட்டணம் என்று படக்குழு முடிவெடுத்து நிர்ணயம் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதால் இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. படத்தின் ப்ரோவுக்காக படக்குழு கடந்த சில மாதங்களாக தீவிரமாக உழைத்து வந்தார்கள். மேலும் ஏற்கனவே சில தேதிகள் குறிப்பிட்டு ப்ரோமோ ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவித்த நிலையில், ப்ரோமோ ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் இம்முறை மிஸ் ஆகாது என்று படக்குழு தரப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X