காஞ்சனா கிழவியோட பேத்திதான் துர்கா.. மறுபடியும் பேய்க்கும் பேய்க்கும் சண்ட.. நெட்டிசன்ஸ் மரண கலாய்!

சென்னை: ராகவா லாரன்ஸின் துர்கா படத்தில் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ள ராகவா லாரன்ஸ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் பிரபலமானவர்.

கோரியோகிராபராக தனது கேரியரை தொடங்கிய ராகவா லாரன்ஸ் தெலுங்கு படத்தின் முலம் நடிகராக அறிமுகமானார். தெலுங்கு படமான ஸ்டைல் மற்றும் முனி படங்கள் ராகவா லாரன்ஸுக்கு சினிமாத்துறையில் பெரும் பிரேக்கை கொடுத்தது.

லாரன்ஸ் குவித்த விருதுகள்

லாரன்ஸ் குவித்த விருதுகள்

தன்னுடைய கோரியோகிராபிக்காக நான்கு பிலிம் ஃபேர் விருதுகளையும் மூன்று நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார் லாரன்ஸ். ஏரளாமான படங்களில் நடித்துள்ள லாரன்ஸ், 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

காஞ்சனா சீரிஸ் படங்கள்

காஞ்சனா சீரிஸ் படங்கள்

இதில் அவரது காஞ்சனா சீரிஸ் படங்கள் பெரும் ஹிட்டானது. காஞ்சனா படம் அவரை பாலிவுட் வரை கொண்டு சென்றது. காஞ்சனா படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமான ராகவா லாரன்ஸ் அக்ஷய் குமாரை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

துர்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

துர்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் லாரன்ஸ் தற்போது ருத்ரன் மற்றும் சந்திரமுகி 2 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தான் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை நேற்று வெளியிட்டார். இதன்மூலம் படத்திற்கு துர்கா என பெயரிடப்பட்டுள்ளது. முதல் லுக்கில் வயதான தோற்றத்தில் நீண்ட மீசை தாடியுடன் மிரட்டல் லுக்கில் உள்ளார் லாரன்ஸ்.

செகண்ட் லுக்கில் இளமையான தோற்றம்

செகண்ட் லுக்கில் இளமையான தோற்றம்

செகண்ட் லுக்கில் இளமையான தோற்றத்தில் உள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தை ராகவா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. படம் தொடர்பான மற்ற தகவல்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதுவும் காஞ்சனா சீரிஸ் போன்ற இருக்குமோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் படத்தின் போஸ்டர்களை பார்த்து மரணமாய் கலாய்த்தும் வருகின்றனர்.

ரஜினிக்கு வெற்றி கிடைக்க போகிறது

ரஜினிக்கு வெற்றி கிடைக்க போகிறது

துர்கா படத்தின் முதல் லுக் போஸ்டரை பார்த்த இந்த நெட்டிசன், ரஜினி செம்மயா இருக்காரு நீண்ட வருடங்களுக்கு பிறகு உங்களால் ரஜினிக்கு வெற்றி கிடைக்க போகிறது... என ஃபர்ஸ்ட் லுக் கெட்டப் ரஜினி போன்று இருப்பதாக கலாய்த்துள்ளார்.

பேய் போதும் அண்ணா

பேய் போதும் அண்ணா

துர்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த இந்த நெட்டிசன், சீரியஸ்லி போதும்ணா... முடியல... நல்ல கதைக்களம் கொடுங்கணா, பார்க்க காத்திருக்கோம். இந்த பேய் போதும் ணா... என கூறியுள்ளார்.

டக்குனு வந்தாலும் டக்கர வந்திருக்கீங்க

டக்குனு வந்தாலும் டக்கர வந்திருக்கீங்க

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த இந்த நெட்டிசன், சொல்லாம கொள்ளாம திடீர்னு டக்குனு வந்தாலும் டக்கர வந்திருக்கீங்க.. ஐ அம் வெய்ட்டிங் என தெரிவித்துள்ளார்.

ஒரே மாவுல இட்லி தோசை

ஒரே மாவுல இட்லி தோசை

இந்த நெட்டிசன், ஒரே மாவுல இட்லி தோசை, ஊத்தப்பம், மசாலா தோசை, பொடி தோசை, ஆனியன் தோசை, ராவா தோசை... பண்ணலாம். ஆனா மாவு ஒன்றுதான்.. என லாரன்ஸ் சொன்ன கதையையே சொல்வார் என கலாயத்துள்ளார்.

பயங்கரமான ஆள் ஆச்சே

பயங்கரமான ஆள் ஆச்சே

ஃபஸ்ட்லுக் போஸ்டரை பார்த்த இந்த நெட்டிசன், பேய், லாரன்ஸை பார்த்து அச்சச்சோ அவரா அவருதான் பயங்கரமான ஆள் ஆச்சே... என கூறுவதாக பதிவிட்டுள்ளார்.

கஞ்சா ஓவர் ஆன மாதிரி இருக்கு

கஞ்சா ஓவர் ஆன மாதிரி இருக்கு

போஸ்டரை பார்த்த இந்த நெட்டிசன், கண்ண பாத்தா கஞ்சா ஓவரா ஆன மாதிரி இருக்கு... துர்காவுக்கு பதிலா ட்ரக்கான்னு வச்சிருக்கலாம்ண்ணா என பதிவிட்டுள்ளார்.

நீங்கதான் எங்களுக்கு பிளஸ் பண்ணனும்

நீங்கதான் எங்களுக்கு பிளஸ் பண்ணனும்

மற்றொரு நெட்டிசனான இவர், லாரன்ஸுக்கு பதில் சொல்லும் வகையில் நியாப்படி பாத்தா நீங்க தான் இந்த படத்தப்பாக்க எங்களுக்கு பிளஸ் பண்ணனும். எங்கள் ஆன்மாசாந்தி அடைய பிராத்தியுங்கள் என பதிவிட்டு கலாய்த்துள்ளார்.

காஞ்சனா போல இல்லாம

காஞ்சனா போல இல்லாம

மற்றொரு நெட்டிசனான இவர், காஞ்சனா போல இல்லாம இருந்தா சரி.. அதே போலா காமெடினு ஒன்னு பண்ணுவீங்களே அதும் வேணாம் என கூறி கிண்டலடித்துள்ளார்.

காஞ்சனா கிழவியோட பேத்திதான் துர்கா

காஞ்சனா கிழவியோட பேத்திதான் துர்கா

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த இந்த நெட்டிசன். காஞ்சனா கிழவியோட பேத்திதான், இந்த துர்கா..!

மறுபடியும், பேய்க்கும் பேயிக்கும் சண்டை..! என கலாய்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X