2 லட்சம் செலவு பண்ணி பிக்பாஸ் வீட்டில் தூங்க வந்த மாமனிதன்.. ராம் ராமசாமியை விளாசும் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் விக்ரமன் வேலை செய்யாமல் வெறும் கருத்து கந்தசாமியாகவே வலம் வருகிறார் என ஏடிகே எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு முதல் ஆளாக செய்யும் ராம் ராமசாமியிடம் சொல்வது தான் வேடிக்கை என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இந்த வாரம் கடந்த வாரங்களை விட ரொம்பவே சுமாராகத்தான் சென்று கொண்டிருக்கிறது.

ஏடிகே காமெடி
"ஏன்டா ஏடிகே அதிகமாக வேலை செய்யாததே ராம் தான்.. அவனை பக்கத்துல வச்சிக்கிட்டு, அவன் வேலை செய்யல.. இவன் வேலை செய்யலன்னு காமெடி பண்ணிட்டு இருக்க ஃபன்னி பாய்" என இந்த நெட்டிசன் பங்கமாக கலாய்த்து விட்டார்.

வேலை செய்யாத விக்ரமன்
"விக்ரமன் கருத்து சொல்ல சொன்னால் பக்கம் பக்கமாக பேசுவார்.. வீட்டில் வேலை செய்ய சொன்னால் மட்டும் செய்ய மாட்டார்!" என ஏடிகே சரியாத்தான்ப்பா சொல்றாரு என சில ரசிகர்கள் விக்ரமனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

என்ன என்ன சொல்றான் பாருங்க
என்ன என்ன சொல்றான் பாருங்க என்கிற போட்டோ மீமை போட்டு பிக் பாஸ் ரசிகர்கள் ஏடிகேவை விளாசி வருகின்றனர். ஊர் கிழவி புலம்ப ஆர்ம்பிச்சிடுச்சு என்றும் கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர். சிலர் ஏடிகே சொல்வது சரிதான் என்றும் ஆனால், அவர் அதை யாரிடம் சொல்கிறார் என்பதில் தான் பிரச்சனை இருக்கு என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

க்ளோஸ் எனஃப்
விக்ரமன் ரியாக்ஷனை பார்த்ததுமே ரசிகர்களுக்கு பிரபுதேவாவின் இந்த ரியாக்ஷன் தான் மனதில் வந்து சென்றிருக்கும். ஒரு நெட்டிசன் அழகாக அதையே எடிட் செய்து போட்டு கமெண்ட் பக்கத்தையே கலகலப்பாக மாற்றி உள்ளார்.

2 லட்சம் கொடுத்துட்டு தூங்குறாரு
பிஆர் டீமுக்கு ரெண்டு லட்சம் கொடுத்துட்டு பிக் பாஸ் வீட்ல கேம் விளையாடுவாருன்னு பார்த்தா, இப்படி படுத்து தூங்குறாரே ராம் என பிக் பாஸ் ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். ஏடிகே ஒரு ஒண்ணா நம்பர் சகுனி, அவர் நேரடியா பேச மாட்டாரு.. இப்படித்தான் பின்னாடி போய் வத்தி வைப்பாரு உஷாரா இருந்துக்கோ ராம் இல்லைன்னா உன்னோட சோலியையும் முடிச்சி விட்டுருவாரு என எச்சரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











