நம்ம பெரியபாசு கிட்ட இன்னும் 2 வாரத்திற்கு அழுகாச்சி எபிசோடு இருக்காம்.. கதறும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு புரமோவிலும் போட்டியாளர்கள் அழுதபடியே பேசும் காட்சிகள் இடம்பெற்று வருவதால் ரசிகர்கள் ரொம்பவே டென்ஷன் ஆகி கலாய்த்து வருகின்றனர்.
போட்டியாளர்கள் குறித்த ஏவியிலேயே அவர்களின் சோக கதையை சொல்லி முடித்துடுங்க என்றும் இன்னும் எத்தனை வாரத்திற்கு சோக கதையை சொல்லியும் அதற்கு டிஸ்லைக் போட்டும் ஓட்டப் போகிறீர்கள் என்றும் கேள்விகளை எழுப்பத் தொடங்கி உள்ளனர்.
பலூன் உடைத்தல், மியூசிக்கல் சேர் போன்ற விளையாட்டுகளையாவது காட்டுங்க இப்படி கண்ணீரை காசாக்கும் வேலை வேண்டாம் என்று விளாசி வருகின்றனர்.

பிரியங்கா ராஜு சண்டை
சீக்கிரமே பிக் பாஸ் வீட்டில் தொகுப்பாளினி பிரியங்காவுக்கும் சீரியல் நடிகர் ராஜு ஜெயமோகனுக்கும் கடும் விவாதம் ஏற்படும் என நேற்றைய எபிசோடு மற்றும் புதிய புரமோக்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அக்ஷரா ரெட்டிக்கு லைக் போட்ட ராஜு பிரியங்காவுக்கு டிஸ்லைக் போட்டது நிச்சயம் பிரச்சனையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரமும்
இன்றைய முதல் புரமோவில் தனது மகனை பிரிந்து வாடும் கண்ணீர் கதையை தாமரை செல்வி சொல்லி உள்ள நிலையில், " அம்மா நீ அழுதம்மா அடுத்தமுறை நீ நாமினேஷன் வந்தா கண்டிப்பா என் ஓட்டு உனக்கு தான்" என கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

அழுகாச்சி எபிசோடு
"நம்ம பெரிய பாசு கிட்ட இன்னும் இரண்டு வாரத்திற்கு அழுகாச்சி எபிசோடு புல்லா இருக்காம்!.. நம்மள ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்க போலிருக்கு" என வடிவேலு போட்டோ மீமை எல்லாம் போட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை வேற லெவலில் பங்கம் பண்ணி வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறோம்
பலூன் உடைக்கிற டாஸ்க், மியூசிக்கல் சேர், பால் பாசிங் உள்ளிட்ட மொக்கை டாஸ்க்கையாவது கொடுங்க பிக் பாஸ் அட்ஜெஸ்ட் பண்ணி பார்க்கிறோம். ஆனால், இந்த அழுகை எபிசோடு இப்படியே தொடர்ந்து சென்றால் இந்த சீசனும் ஃபிளாப் ஆகி விடும் என விளாசி வருகின்றனர்.

அதிகபிரசங்கி ராஜு
இந்த சீசன்ல கடுமையான போட்டியாளர் என்பதை காட்டிக் கொள்ள வேண்டும் என்றே ஒவ்வொருத்தர் கதைக்கும் தாமாக சென்று காரணத்தை கூறி டிஸ்லைக் போட்டு வரும் ராஜு ஜெயமோகனை அதிபிரசங்கி என வச்சு செய்து வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். "அதிகபிரசங்கி ராஜு கதை வரும்னு பார்த்தா இந்த தாமரை கதறிட்டு இருக்காங்க" என கமெண்ட் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











