லாஜிக் மிஸ்டேக்ஸ்..ரஜினியின் கூலிக்கு விழுந்த அடி.. விஜய், அஜித்னு யாரையும் விட்டு வைக்காத நெட்டிசன்ஸ்

சென்னை: ரஜினியின் கூலி படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தாலும் விமர்சன ரீதியாக அடிமேல் அடி வாங்கிக் கொண்டு உள்ளது. படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள் உள்ளன. இதை இணையவாசிகள் நார் நாராக பிரித்து தொங்கவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் எக்ஸ் பக்கத்தில் இணைய வாசி ஒருவர், கூலி படத்தில் உள்ள லாஜிக் மிஸ்டேக்குகள் போல வேறு படங்களில் எந்தெந்த மாதிரியான லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றன என்பது குறித்து கேள்வி எழுப்ப, இதோ வந்துட்டோம் என்பது போல இணையவாசிகள் கொடுத்த பட்டியலில் பெரிய நடிகர்கள் தொடங்கி மூத்த நடிகர்கள் வரை எவரும் தப்பிக்கவில்லை.

நர்சிம் என்ற எக்ஸ்தளவாசி தனது எக்ஸ் பக்கத்தில், " இந்த 'கூலி' பட லாஜிக் பத்தி நிறைய பேசுறோம்ல.
இப்படி வேற எந்த படங்களில் சின்ன விஷயத்தில் ஆரம்பித்து லாஜிக்/ஓட்டைகள் கவனிச்சிருக்கீங்களா?
உதாரணமா, ஏழாம் அறிவு படத்தில் அவ்வளவு நவநாகரீகமா ட்ரெஸ் பண்ணிட்டு அடையாறு ஸ்டாப்ல நிக்குற ஸ்ருதி கால்ல செருப்பு இருக்காது. (ஏன்னா அடுத்து யானைல ஏறும் காட்சி) இப்பிடி" என குறிப்பிட்டிருந்தார். அதற்கு வந்த பதில்களை கீழே காணலாம்.

வலிமை ல அம்மா மருத்துவமனைல இருக்க காட்சில அஜித் அவர்களின் இரண்டு காட்சிகளில் வேற வேற hair style இருக்கும். பிரபலமான logic முரண்ல அரையிறுதி தோற்று இறுதிப்போட்டி போன கில்லி. ஆயிரத்தில் ஒருவன் ல இவங்க கடினமா கடந்து போன தூரத்தை கடைசியாக விமானத்தில் வந்தடைந்துடுவாங்க. கில்லி இறுதி கட்சிகள் ல மேட்ச் நடக்கும் போது ஷார்ட்ஸ் போட்டிருந்த விஜய், பிரகாஷ்ராஜ் கூட சண்ட போடும் போது lower ah மாறிடும்.

Netizens Trolls Vijay Ajith Kamal Hassan After Rajinikanth Coolie Logic Mistakes Overflow On Internet
Photo Credit:

இந்த லாஜிக் எல்லாம் விடுங்க.. "தாலி கட்டிய ராசா" படத்தில் கனகா காலில் முள் குத்திடும். அதை பார்த்ததும்.. பேண்ட் போட்டு இருந்த முரளி ஓடி வந்து, அடுத்த சீன் அவரது வேட்டியை கிழிப்பாரு, கனகாவிற்கு காலில் கட்டு போட. விக்ரம்ல ஏஜென்ட் டீனா சீன்ல டீனா மருமகள் கிட்ட போனை கொடுத்து உங்க மாமாகிட்ட பேசுங்கும் அந்தம்மா அவர்தான் செத்துட்டாரேன்னு சொல்லாம அவர்கிட்ட எல்லாம் நான் பேச மாட்டேன்ங்கும்! VIP அம்மா அம்மா பாட்டுல கதவுகிட்ட நிக்குற தனுஷ் கால்ல இருக்கும் Shoes அவர் உட்காரும் போது இருக்காது, இத்தனைக்கும் அவர் அங்கேயே தான் இருப்பாரு ங்க ண்ணா.அப்புறம் பாகுபலி Beginningல வர்ற பச்சை தீ நீயடா பட்டுல தமன்னாவோட blouse பின்னாடி 2:26 இல்லாத knot 2:29ல எப்படி வந்துச்சு?

பெத்த புள்ளைய தான் அடையாளம் தெரியல.. atleast ஒரு DNA டெஸ்ட் எடுக்காம படம் முழுக்க நீ தான் லியோவா, நீ தான் லியோவா னு கேட்டுட்டு கடைசில செத்து போயிடுவானுங்க தாஸ் பிரதர்ஸ். பொன்னியின் செல்வன் படத்தில் வீரபாண்டியனை கொல்ல ஆதித்த கரிகாலன் திறக்கும் குடிசை கதவில் நவீன தாழ்பாள். புஷ்பா 2 முதல் காட்சியில் ஜப்பான் துறைமுகம் என‌ காட்டுவார்கள். ஆனால் அங்கு ஓடுவது எல்லாம் இந்திய லாரிகள் " என இந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த காலத்து நெட்டிசன்கள் ஒரு படத்தை எப்படி எல்லாம் பார்க்கிறார்கள் என்று பாருங்களேன் என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X