For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இரட்டை இயக்குனர்கள் + புதுமுக நாயகன் எஸ்.கே.ராமு கலக்கும் " டம்மிஜோக்கர்"

  |

  சென்னை: ரேடியண்ட் விஷ்வல்ஸ் என்ற நிறுவனம் "டம்மி ஜோக்கர் " என்ற திகிலுடன் கூடிய நகைச்சுவை படத்தை தயாரிக்கிறது.

  எஸ்.கே.ராமு நாயகனாக அறிமுகமாகும் இதில் நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா, குட்டிப்புலி சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி , தஷ்மிகா, டி.எம்.சந்திரசேகர், சிவபாலன், தவமணி, குட்டி திரிஷா, திருப்பூர் சந்தானம், சைக்கோ தர்மா, நந்துஸ்ரீ, தர்ஷன், மதுரை சாந்தி இன்னும் பலர் நடித்துள்ளனர்.

  https://tamil.filmibeat.com/news/irandam-ulaga-porin-kadaisi-gundu-movie-new-poster-release-065415.html

  ஆலன் பிரகாஷ் இசையையும், திருப்பதி ஆர்.சாமி ஒளிப்பதிவையும், ஜி.வேணுகோபால், ராஜா இருவரும் பாடல்களையும், ராம் படத்தொகுப்பையும், ஜாய் மதி நடன பயிற்சியையும், கவனித்துள்ளனர்.

  வருது வருது.. விலகு விலகு.. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு!வருது வருது.. விலகு விலகு.. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு!

  வினோ நாகராஜன் இதன் கதை எழுதி, திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி உள்ளார் ரேடியண்ட் விஷ்வல்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறது.

  https://tamil.filmibeat.com/news/irandam-ulaga-porin-kadaisi-gundu-movie-new-poster-release-065415.html

  தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்திய சிவாஜி கணேசன் நடித்த "பராசக்தி " படத்தை இயக்கிய கிருஷ்ணன் - பஞ்சு, வெள்ளி விழா கொண்டாடிய "அன்னக்கிளி " படத்தை இயக்கிய தேவராஜ் - மோகன் நூறு நாட்கள் ஓடிய " பன்னீர் புஷ்பங்கள் " படத்தை இயக்கிய பாரதி - வாசு "உல்லாசம் "படத்தை இயக்கிய ஜேடி - ஜெர்ரி , " விக்ரம் வேதா " படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி வரிசையில் இரட்டை இயக்குனர்களாக வினோநாகராஜன் _ என்.கல்யாணசுந்தரம் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளார்கள்.

  https://tamil.filmibeat.com/news/irandam-ulaga-porin-kadaisi-gundu-movie-new-poster-release-065415.html

  படத்தை பற்றி இயக்குனர்கள் இருவரும்," 22 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது தந்தையை தேடி அந்த கிராமத்திற்கு வருகிறான் ஒருவன். அவனுக்கு அந்த ஊரில் கதாநாயகனும் நண்பர்களும் உதவி புரிவதாக கூறுகிறார்கள். ஊர் முழுக்க விசாரிக்கையில் பேய் பங்களாவை காட்டுகின்றனர் ஊர் மக்கள். மேலும் அந்த பங்களாவினுள் தங்க புதையல் இருப்பதாகவும் அதனுள் தான் இவன் தந்தை சென்றதாகவும் சொல்கிறார்கள்.
  https://tamil.filmibeat.com/news/irandam-ulaga-porin-kadaisi-gundu-movie-new-poster-release-065415.html

  அவனுக்கு அப்பா, நமக்கு புதையல் என்று கணக்கு பண்ணி அவனுக்கு உதவுவது போல் பங்களாவுக்குள் எல்லோரும் நுழைகின்றனர். இவர்கள் உள்ளே நுழைந்தவுடன் கதவு உள் பக்கம் மூடிக் கொள்கிறது. எவ்வளவோ இவர்கள் முயன்றும் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. அனைவரும் திகிலடைகின்றனர். அதன் பிறகு நிகழும் பரபரப்பான சம்பவங்களால் அவன் தந்தையை கண்டுபிடித்தார்களா? புதையல் அவர்களுக்கு கிடைத்ததா?

  https://tamil.filmibeat.com/news/irandam-ulaga-porin-kadaisi-gundu-movie-new-poster-release-065415.html

  இப்படி செல்லும் கதை ஒரு கட்டத்தில் செம காமெடிக்கு மாறும். முன்னனியில் இருக்கிற பிரபலமான 22 நடிகர்கள் போல் உருவ ஒற்றுமை உள்ளவர்களை இதில் நடிக்க வைத்துள்ளோம். அவர்கள் அடிக்கிற லூட்டி காமெடியின் உச்சகட்டமாக இருக்கும். காரைக்குடியிலும் அதனை சுற்றியுள்ள அழகிய இடங்களிலும் படமாக்கி உள்ளோம்" என்றார்கள் இருவரும் .

  https://tamil.filmibeat.com/news/irandam-ulaga-porin-kadaisi-gundu-movie-new-poster-release-065415.html
  Read more about: cinema சினிமா
  English summary
  A new movie is called dummy joker is on production with new comers.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X