Don't Miss!
- News
பிராமணர் என்பதற்காகவே வெறுப்பதா? இதுவும் தீண்டாமைதான் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கல்யாண மேடையில் கண்கலங்கிய செய்திவாசிப்பாளர் கண்மணி.. சீரியல் நடிகர் நவின் செம ஹேப்பி!
சென்னை: சின்னத்திரை நடிகைகளை தாண்டி சில செய்திவாசிப்பாளர்கள் மீது ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு கிரஷ் இருந்து கொண்டு தான் இருக்கும்.
Recommended Video
செய்திவாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் சீரியல் நடிகையாக மாறி சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகிறார்.
பிரியா பவானி சங்கரை தொடர்ந்து அனிதா சம்பத் பிக் பாஸ், சினிமா என நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சன் நியூஸ் செய்திவாசிப்பாளர் கண்மணிக்கும் சீரியல் நடிகர் நவினுக்கும் இன்று கோலாகலமாக சென்னையில் திருமணம் நடைபெற்றது.
தப்பாச்சே..
குளிகை
நேரத்தில்
திருமணம்
செய்த
நயன்தாரா-விக்னேஷ்
சிவன்..
என்ன
பலன்
ஏற்படுமாம்
தெரியுமா?

செய்திவாசிப்பாளர் கண்மணி
லயோலா கல்லூரியில் ஜர்னலிஸம் படித்து முடித்து விட்டு சன் நியூஸ், நியூஸ் 18 உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றி பிரபலமானவர் செய்திவாசிப்பாளர் கண்மணி. மே 30ம் தேதி 1996ம் ஆண்டு பிறந்த இவர் தனது 26வது வயதில் திருமணம் செய்து கொண்டார். செய்திவாசிப்பாளரான கண்மணி மீது தமிழ்நாட்டில் ஏகப்பட்ட இளைஞர்கள் பயங்கர கிரஷ்ஷில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸுக்கு வருவார்
அனிதா சம்பத்தை போலவே கண்மணியும் பிக் பாஸுக்கு வருவார், அப்படியே ஹீரோயின் ஆகி விடுவார் என ரசிகர்கள் ரொம்பவே கனவு கண்டு வந்தனர். ஆனால், சட்டுபுட்டுன்னு சீரியல் நடிகர் நவீனை கரம் பற்றி திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளார். நேற்று நயன்தாரா திரும்ணம் காலையில் நடைபெற்ற நிலையில், கோலிவுட் பிரபலங்கள், சீரியல் பிரபலங்கள் என பலரும் நவீன் - கண்மணியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இரவு கலந்து கொண்டனர்.

களைகட்டிய திருமண வரவேற்பு
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி களைகட்டியது. கோட்சூட்டில் மணமகன் கோலத்தில் மாஸ் காட்டினார் ‘இதயத்தை திருடாதே' சீரியல் புகழ் நடிகர் நவீன். பிங்க் நிற ரிசப்ஷன் உடையில் அழகு மங்கையாக மேடையை அலங்கரித்து இருந்தார் கண்மணி.

கண்கலங்கிய கண்மணி
இந்நிலையில், இன்று காலை சுபமுகூர்த்தத்தில் கண்மணியின் கழுத்தில் சின்னத்திரை நடிகர் நவீன் தாலி கட்டினார். தாலியை தொட்டுப் பார்த்து கண்மணி கண் கலங்கும் வீடியோ யூடியூப் சேனல்களில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

காதல் திருமணமா
மீடியாவில் பணியாற்றும் இருவரது திருமணமும் காதல் திருமணமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என சில மாதங்களுக்கு முன்னதாக நிச்சயதார்த்தம் நடைபெற்ற போதே இருவரும் அறிவித்து இருந்தனர். அதன் பிறகு ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலிக்கத் தொடங்கினர். பல இடங்களுக்கு டேட்டிங் செய்து வந்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.