»   »  விஜய்யின் 'புலி' படத்தில் எதிர்பார்க்கப்படும் 9 விஷயங்கள் இவை தான்!

விஜய்யின் 'புலி' படத்தில் எதிர்பார்க்கப்படும் 9 விஷயங்கள் இவை தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் புலி படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Select City
Buy Chiruthai Puli (U/A) Tickets

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்துள்ள புலி படம் வரும் அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் இரண்டு டிரெய்லர்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதிலும் இரண்டாவது டிரெய்லர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.


இந்நிலையில் புலி படத்தில் இருந்து எதை எதை எதிர்பார்க்கலாம் என பார்ப்போம்,


விஷுவல் எஃபெக்ட்ஸ்

விஷுவல் எஃபெக்ட்ஸ்

புலி படத்தில் உலகத் தரம் வாய்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸை நிச்சயம் எதிர்பார்க்கலாம். படத்தில் உலகின் தலை சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றியுள்ளனர்.


கதை

கதை

என்ன தான் விஷுவல் எஃபெக்ட்ஸ் சூப்பராக இருந்தாலும் கதை இல்லாவிட்டால் படம் படுத்துவிடும். புலி படத்திலும் விஷுவல் எஃபெக்ட்ஸோடு கதையும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நடிப்பு

நடிப்பு

படத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி, ஸ்ரீதேவி, சுதீப் என நடிகர், நடிகைகள் தங்களின் முழு திறமையை வெளிப்படுத்தியிருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


டான்ஸ்

டான்ஸ்

விஜய் படம் என்றால் நச்சுன்னு டான்ஸ் இல்லாமலா. அதனால் புலி படத்திலும் ரசிகர்களை அசர வைக்கும் வகையில் விஜய் டான்ஸ் ஆடியிருப்பார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.


ஆக்ஷன்

ஆக்ஷன்

எந்த பேன்டஸி படமாக இருந்தாலும் ஆக்ஷன் தூக்கலாக இருக்கும். அப்படி இருக்கையில் புலி படத்திலும் ஆக்ஷனுக்கு குறைவு இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


பிஜிஎம்

பிஜிஎம்

துள்ளல் இசைக்கு பெயர் போன தேவிஸ்ரீபிரசாத் புலி படத்தின் பிஜிஎம்-ஐ பார்த்து பார்த்து போட்டிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


காமெடி

காமெடி

ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, சத்யன், விதியுலேகா ராமன் ஆகியோர் படத்தில் நடித்துள்ளதால் வயிறு வலிக்கும் அளவுக்கு காமெடி காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.


பன்ச்

பன்ச்

எந்த படத்திற்கும் வசனம் மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் புலி படத்தில் விஜய் சில பன்ச் வசனங்கள் பேசி திரையரங்குகளை அதிர வைப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


நடிகர்கள்

நடிகர்கள்

படத்தில் நட்சத்திர பட்டாளம் உள்ளதால் அனைவருக்கும் போதிய அளவுக்கு காட்சிகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


English summary
Vijay starrer Puli is hitting the screens on october 1st. Above are the nine expectations from his fantasy movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil