Selfish, Evil, அடுத்தவர் கஷ்டத்தில் சந்தோஷப்படும் ஒரே ஆள் நீ தான்...பிரியங்கா மீது பாய்ந்த நிரூப்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பனிரெண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் இன்றைய ப்ரோமோவில் பிரியங்காவிடம் ஆவேசமாக நிரூப் பேசியதை வைத்து, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இன்னும் நான்கு வாரங்கள் மட்டுமே மீதமுள்ளது. 10 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடத்தப்பட உள்ளது. இதில் முதலில் யாருடைய குடும்பம் உள்ளே வர போகிறது என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

கேப்டன்சி டாஸ்க்
இந்நிலையில் 78 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல் ப்ரோமோவில், இந்த வார தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி நடத்தப்படுகிறது. இதில் ஒரு கயிறு கொடுக்கப்பட்டு, அதை ஒருவர் பின் ஒருவராக அனைவரும் பிடிக்க வேண்டும். கயிற்றை பிடிக்காமல் விடுபவர் போட்டியில் இருந்து வெளியேறுவார். இறுதி வரை கயிற்றை பிடித்திருப்பவர் இந்த வார தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

ஏய்ன்னு கூப்பிடாத
போட்டியாளர்கள் அனைவரும் கயிற்றை பிடித்தபடி சேர்ந்தே செல்கின்றனர். கயிற்றை பிடித்தபடியே சாப்பிடுகின்றனர். வழக்கம் போல் இந்த டாஸ்கிலும் ராஜு முதல் ஆளாக கயிற்றின் பிடியை விட்டு, எழுந்து செல்கிறார். நிரூப், பிரியங்காவை ஏய் பிரியங்கா என கூப்பிடுகிறார். இதற்கு கோபமாக கத்தும் பிரியங்கா, ஏய் என கூப்பிடாதே. பெயர் இருக்குல. அதை சொல்லி கூப்பிடு என்கிறார்.

பிரியங்காவிடம் கத்தும் நிரூப்
இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆவேசமாக பிரியங்காவிடம் கத்தி பேசும் நிரூப், சரியோ தப்போ எல்லாவற்றிலும் உன்னுடைய வாய்ஸ் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நீ பேசுகிறாய். ஒரே ஒரு முறையாவது எனது முயற்சியால் கேப்டனாக வேண்டும் என நினைக்கிறேன் என நான் சொல்லுவது உனக்கு கேட்கவில்லையா. நாங்க ரெண்டு பேர் பேசிக் கொண்டிருக்கையில் நீ எதற்காக குறுக்கே வருகிறாய் என இருவரும் கத்தி, சண்டை போடுகிறார்கள்.

selfish பிரியங்கா
உன்னுடைய Selfish, evil, அடுத்தவரின் துன்பத்தில் சந்தோஷப்படுகிற ஒரே ஆள் நீ தான் என பிரியங்காவிடம் முகத்திற்கு நேராக சொல்கிறார் நிரூப். இதைக் கேட்டு பிரியங்கா ஷாக்காகி விட்டார். இதை பார்த்த நெட்டிசன்கள், என்னடா இப்படி பொச்சுக்குன்னு உண்மையை சொல்லிட்ட. தாமரை கையில கயிறு இருக்கே, அது தான் சண்டைக்கு காரணமா. யாரையாவது சீண்டனும், குழப்பனும் அதுக்கு தான் இந்த சண்டையா என கேள்வி கேட்டு வருகிறார்.

இத தான் எதிர்பார்த்தோம்
நிரூப் இத தான் எதிர்பார்த்தோம். நீ வின் பண்ணிட்ட. நிரூப் சொல்றது கரெக்ட் என சிலர் நிரூப்பிற்கு ஆதரவாகவும், பிரியங்கா நிஜமாகவே ஸ்டிராங் கேர்ள் என சிலர் பிரியங்காவிற்கு ஆதரவாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்க நீங்களாகவே இருப்பது பெருமையாக உள்ளது என பலர் பிரியங்காவை பாராட்டி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











