புரமோவை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்.. தாமரையும் மதுமிதாவும் அப்படி சண்டை போட யார் காரணம் தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் எடிட்டர் ஒரு குசும்புக்காரர் என்பது இன்றைய மூன்றாவது புரமோவையும் எபிசோடையும் பார்த்தவர்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பெருசா சண்டையே வர மாட்டேங்குது.. பிக் பாஸ் ரசிகர்கள் வேற புரமோவில் சண்டையே வரலையேன்னு கலாய்க்குறாங்களேன்னு அப்படியொரு புரமோவை எடிட் பண்ணி போட்டுள்ளார்.

உண்மையாகவே தாமரைக்கும் மதுவுக்கும் அப்படி சண்டை வர யார் காரணம் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பெரிய அல்வாவை கொடுத்துள்ளனர்.

தாமரைக்கும் மதுவுக்கும் சண்டை

தாமரைக்கும் மதுவுக்கும் சண்டை

மதுமிதாவும் தாமரை செல்வியும் சும்மா கோபப்பட்டு மரியாதை குறைவாக ஒருமையில் பேசி சண்டை போட்ட மூன்றாவது புரமோ பிக் பாஸ் ரசிகர்களை ரொம்பவே உற்சாகப்படுத்தியது. இந்த வாரமும் தாமரை செல்வி சண்டையை ஆரம்பித்து விட்டார் என புரமோவை பார்த்து பொங்க ஆரம்பித்தனர்.

தீபாவளி சரவெடி

தீபாவளி சரவெடி

மது மற்றும் தாமரை இடையே "அவ இவ" என பேசுற என்கிற சண்டை கிளம்பியது. "அவ" கெட்டவார்த்தை இல்லை என பதிலுக்கு இம்சை அரசன் கெட்டப்பில் இருந்த மதுமிதா வெளுத்து விட்ட புரமோவை பார்த்து இன்னைக்கு தீபாவளி சரவெடி காத்திருக்கு என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் மிஞ்சியது நமத்துப் போன புஸ்வானம் தான்.

மண்டையை பிய்த்துக் கொண்டு

மண்டையை பிய்த்துக் கொண்டு

மதுமிதா செய்தது சரியா? அல்லது தாமரை பேசியது சரியா? என்றும் யார் முதலில் சண்டையை அரம்பித்தது என புரியாமல் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் பிக் பாஸ் எடிட்டரை பார்த்து எங்களை எல்லாம் பார்த்தால் என்ன பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா? என வாய்க்கு வந்தபடி திட்டும் அளவுக்கு நிகழ்ச்சியை பார்த்து காண்டாகி விட்டனர்.

சண்டைக்கு யார் காரணம்

சண்டைக்கு யார் காரணம்

தாமரை செல்விக்கும் மதுமிதாவுக்கும் இடையே இப்படியொரு சண்டை ஏற்பட காரணமே நிரூப் தான். போரா போய்க் கொண்டிருக்கு பிக் பாஸ் என புரிந்து கொண்ட நிரூப் திடீரென டாஸ்க் கொடுக்கிறேன் என்கிற பெயரில் தாமரை மற்றும் மதுமிதாவுக்கு கொடுத்த சண்டை காட்சியை இருவரும் கச்சிதமாக செய்து மற்ற ஹவுஸ்மேட்ஸை கதி கலங்க செய்து விட்டனர்.

நல்ல நடிகர்கள்

நல்ல நடிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைத்து போட்டியாளர்களும் பிரபலமாக இல்லை என்றாலும் அனைவருமே நல்ல நடிகர்கள் என்பது இந்நேரம் ஒவ்வொரு போட்டியாளர்களின் குணம் இப்படித்தான் அவங்க ரொம்ப பாவம் என நினைத்துக் கொண்டு சப்போர்ட் செய்து வருபவர்களுக்கு புரிந்திருக்கும். நல்லா ஷோ காட்ற மேன்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X