அபிராமியுடன் ரிலேஷன்ஷிப்.. யாஷிகாவின் எக்ஸ் காதலர் நிரூப்.. பிக் பாஸ் அல்டிமேட்டில் வெளிப்படை!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை மட்டுமின்றி பிக் பாஸ் போட்டியாளர்களையும் நிரூப் ரொம்ப டீப்பா ஃபாலோ செய்துள்ளார் போல தெரிகிறது.
யாஷிகாவின் முன்னாள் காதலர் என 5வது சீசனில் வெளிப்படையாக பேசிய நிரூப், தற்போது அபிராமி உடன் சில காலம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம் என்பதை போட்டு உடைத்துள்ளார்.
ஆனால், இப்போ பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டிருப்பது தன்னுடன் பழகிய அந்த பழைய அபிராமி இல்லை என்றும் ட்விஸ்ட் கொடுத்திருப்பது எதற்காக என்பது தான் தெரியவில்லை என ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.

மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள்
பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப் நந்தகுமார் கடைசி வரை பல திட்டங்களையும் மைண்ட் கேம்களையும் செய்து கடைசி நாள் வரை அந்த வீட்டில் இருந்தார். ஆனால், டைட்டிலை வெல்ல முடியாத நிலையில், விட்டதை பிடிக்க மீண்டும் அதே வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.

யாஷிகாவின் எக்ஸ் லவ்வர்
பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளரும் நடிகையுமான யாஷிகா ஆனந்தின் எக்ஸ் லவ்வர் தான் நான் என நிரூப் பிக் பாஸ் சீசன் 5ல் வெளிப்படையாக பேசினார். அதே போல கடைசியாக குடும்ப உறவினர்கள் எல்லாம் வீட்டிற்கு ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது வந்த போது யாஷிகா ஆனந்த் நிரூப்பை சந்திக்க வந்திருந்தது ரசிகர்களை பெரிதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அபிராமியுடன் ரிலேஷன்ஷிப்
பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர் யாஷிகாவுடன் மட்டுமல்ல பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் அபிராமி உடனும் நெருங்கிய உறவில் இருந்துள்ளார் நிரூப் நந்தகுமார். இதை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலேயே தற்போது வெளிப்படையாக கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே சிலருக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தாலும் பெரும்பாலான ரசிகர்களுக்கு இது புதிய தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமினேட் செய்த நிரூப்
பிக் பாஸ் அல்டிமேட்டில் முதல் நாளில் நடந்த நாமினேஷன் நிகழ்வில் அபிராமியை நாமினேட் செய்த நிரூப் அவருடன் தான் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், ஆனால், அப்போது பார்த்த அபிராமி இவர் இல்லை என்றும் இப்போ ஆளே மாறிப் போயுள்ளார் என்றும் நிரூப் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.
Recommended Video

லவ் டிராக் வருமா
நிரூப் மற்றும் அபிராமி இடையே மீண்டும் லவ் டிராக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறுமா? இல்லை இருவருக்கும் ஆரம்பத்திலேயே முட்டிக் கொள்வார்களா? என பார்ப்பதை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளனர். ஸ்மோக்கிங் ரூமில் பாலாஜி முருகதாஸ், அபிராமி, நிரூப் உள்ளிட்டோர் இருந்த காட்சிகளும் பிக் பாஸ் அல்டிமேட்டில் இடம்பெற்று ரசிகர்களை ஷாக் ஆக்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











