தாமரையை ஆயுதமாக்கும் நிரூப்.. அதே பிரியங்காவின் ஃபேன் பேஸ் பத்தி தெரிஞ்சு தான் நட்பாக பழகினாரா?
சென்னை: பிரியங்கா இன்னமும் நிரூப் தான் தனது நண்பர் என சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
ஆனால், நிரூப் எப்பவோ பிரியங்காவுக்கு எதிரான வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
தாமரையை பிரியங்கா மற்றும் ராஜுவுக்கு எதிராக ட்ரிக்கர் பண்ணி விடும் முயற்சியில் இறங்கியுள்ள நிரூப்பின் லீலைகள் அடங்கிய மூன்றாவது புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

தொடை நடுங்கி நிரூப்
சிபி நிரூப்பை நேருக்கு நேர் பார்த்து தொடை நடுங்கி என்று சொன்ன பிறகும் அந்த டாஸ்க் முடிந்த பிறகு சிபியிடம் நிரூப் சண்டையே போடவில்லை. அதற்கு பதிலாக அதையே கேடயமாக பயன்படுத்திக் கொண்டு கடந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பித்தார்.

பிளேட்டை திருப்பிய பிரியங்கா
நிரூப் பயன்படுத்திய டிரம்ப் கார்டையே பிரியங்கா கொஞ்சம் மாற்றி நிரூப் தான் டஃப் ஆன போட்டியாளர் என்று சொல்லியே ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களின் ஓட்டுக்களையும் அள்ளி நிரூப்புக்கு கருப்பு ரோஜாவை கொடுத்து ஓரமாக உட்கார வைத்து விட்டார்.

தாமரை ஆயுதம்
தாமரையிடம் அன்பாக பேசி பிரியங்காவுக்கும் ராஜுவுக்கும் எதிராக அவரை சண்டை போடும் ஆயுதமாக திருப்பி விடும் முயற்சியில் நிரூப் பக்கா ஸ்ட்ராட்டஜியுடன் களமிறங்கி உள்ளார் என மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கில்லாடி தாமரை
நிரூப்பிடம் அவருக்கு சாதகமாக பேசுவது போலவே பேசி கடைசியில் தனது காரியத்தில் மட்டுமே தாமரை குறியாக இருப்பார் என்பது நிரூப்புக்கே புரியாமல் இருப்பது தான் இதில் வேடிக்கை என்றும் கலாய்த்து வருகின்றனர். நேற்றைய எபிசோடில் நிரூப்புக்காக விட்டுக் கொடுப்பதாக அவரிடம் பேசிய தாமரை கருப்பு ரோஜா கொடுக்கும் போது கம்முனு இருந்து விட்டார்.

பிரியங்காவின் ஃபேன் பேஸ்
ராஜு பிரியங்காவுக்கு ஆறுதல் சொல்லும் காட்சிகளும் பதிலுக்கு பிரியங்காவை எதிர்த்து பேச இங்கு எவனுக்கும் தைரியம் இல்லை ஏனென்றால் பிரியங்காவின் ஃபேன் பேஸ் தெரியும் என நிரூப் தாமரையிடம் சொல்லும் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள், அதே ஃபேன் பேஸ் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு தானே நீங்களும் நட்பாக பழகிட்டு இருந்தீங்க என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

அந்த ஆசை
எப்படியாவது பிக் பாஸ் டைட்டிலை அடைந்து விட வேண்டும் என்கிற எண்ணம் மற்றவர்களை விட நிரூப்புக்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால், தொடர்ந்து நிரூப்பை அந்த இடத்தில் இருந்து இறக்கி விடும் வேலையை சிபி சரியாக பார்த்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

ஓட்டுக்கள் குறையும்
நேற்று நிரூப்பை ஹவுஸ்மேட்கள் கருப்பு ரோஜா கொடுத்து வெளியேற்றியதும் ஆரியை காப்பி அடித்து நிரூப் கத்திய நிலையில், அவருக்கு ஓட்டுக்கள் அதிகரித்தன. ஆனால், நிரூப்பின் உண்மையான நரித்தனம் இன்றைய எபிசோடுக்கு பிறகு தெரியவந்தால் நிச்சயம் நிரூப்புக்கான ஓட்டுக்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











