»   »  நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து வெளியேறிய நிஷா: ஏன், என்ன நடந்தது?

நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து வெளியேறிய நிஷா: ஏன், என்ன நடந்தது?

Posted By:
Subscribe to Oneindia Tamil
நெஞ்சம் மறப்பதில்லையிலிருந்து வெளியேறிய நிஷா- வீடியோ

சென்னை: நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நிஷா கணேஷ்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் சத்யாவாக நடித்து வந்தார் நிஷா கணேஷ். அமித் பார்கவின் காதலியாக அவர் நடித்தார்.

இந்நிலையில் அவர் சீரியலில் இருந்து வெளியிறேயுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

நன்றி

நன்றி

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மூலம் அன்பை தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி. நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது சத்யா கதாபாத்திரம் மிகவும் சவாலானதாக இருந்தது.

சத்யா

சத்யா

காதலில் விழும் துணிச்சலான கதாபாத்திரம் சத்யா. ஆனால் சூழ்நிலையால் அந்த காதல் பறிக்கப்பட்டு பின்னர் மீண்டும் கிடைக்கிறது. சத்யா போன்ற கதாபாத்திரத்தில் நான் இதற்கு முன்பு நடித்தது இல்லை.

வளர்ச்சி

வளர்ச்சி

வித்தியாசமானவற்றை செய்தால் நான் கலைஞராக வளர முடியும். ஒரு கலைஞராக கதாபாத்திரங்களை பாசிட்டிவ், நெகட்டிவாக பார்க்க மாட்டோம். சத்யாவாக பயணம் செய்ய முடிவு செய்தேன். ஆனால் சில மாதங்களில் சத்யா கதாபாத்திரம் பல சீரியல்களில் வருவது போன்று முழுக்க முழுக்க நெகட்டிவாக மாறியது.

வருத்தம்

வருத்தம்

தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் என்று அனைவரும் சத்யாவின் கதாபாத்திரத்தை சுவராஸ்யமாக்க முயன்றனர். ஆனால் சில மாதங்கள் கழித்தும் எதுவும் மாறாததால் நான் வெளியேற முடிவு செய்தேன். என்னை புரிந்து கொள்ளும் குழு கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலி. நெஞ்சம் மறப்பதில்லை குழுவை மிஸ் பண்ணுவேன். இந்த வாய்ப்பு அளித்த விஜய் டிவிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் நிஷா.

English summary
Nisha Ganesh has walked out of Nenjam Marappathillai serial as her character Sathya has become completely negative in due course of time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X