For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஏன் அழறீங்க.. வாய் கூசாம அப்படி பேசுதே அனிதா.. நிஷாவை கதற விட்டதே நீ தானே கன்னுக்குட்டி!

  |

  சென்னை: ஏற்கனவே மக்கள் மத்தியில் நம்ம பேரு நாரி போயிருக்கு, இந்த வாரம் போனா, ஒரே அடியா வீட்டுக்கு போக வேண்டியது தான் என டாப்புள் கார்டை அழகா நிஷாவிடமிருந்து ஆட்டையை போட்டார் அனிதா சம்பத்.

  முன்னாடியே கெத்தா விட்டுக் கொடுத்திருந்தா நிஷாவுக்கு ஒரு நல்ல பேராவது கிடைச்சிருக்கும்.

  எப்படி இருந்தாலும், நீங்க விஜய் டிவி புராடக்ட்ஸ் உங்களை அனுப்புறதுக்கு முன்னாடி சன் டிவி புராடக்டை வெளியே துறத்திடுவாங்க, அதுக்கு ஏன் மா இப்படி அழுகுறீங்க என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

  நிவர் புயல்.. மழையில் ஆட்டம் போடும் சாக்‌ஷி.. ஜாக்கிரதையாக இருங்கள் என எச்சரிக்கும் ரசிகர்கள்!

  நல்லா பண்றாரு

  நல்லா பண்றாரு

  இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே சண்டையை மூட்டி விடும் வேலையை நல்லா பண்றாரு பிக் பாஸ். போட்டியாளர்களும் செம சூப்பரா கோபப்படுற மாதிரி இன்னாம்மா ஆக்ட் கொடுக்கிறாங்க.. இதே இவங்களாம், ரோடுல போகும் போது, ஒருத்தன் சும்மா உரசிட்டுப் போனால், வாயில் இருந்து தூய தமிழ் சொற்கள் எல்லாம் துதிபாடும். இங்கே அங்குட்டு போய் சண்டை போடுங்கடா என சொல்லும் ரேஞ்சுக்கு நல்லாவே சண்டை போடுறாங்க!

  அனிதாவின் அச்சம்

  அனிதாவின் அச்சம்

  மக்கள் மேல இல்லை, சுத்தமா தான் மேலயே அனிதா சம்பத்துக்கு நம்பிக்கையே இல்லை. சிங்கப்பெண்ணே என்றும் டிரெண்டிங் போட்டியாளராகவும் வந்த கன்னுக்குட்டி அனிதா திடீர் திடீரென கங்காவில் இருந்து சந்திரமுகியாகி மாறி விடுகிறார். இன்னொரு முறை நாமினேட் ஆனால், பொட்டிப் படுக்கையை தூக்கிட வேண்டியது தான் என ரொம்பவே பயந்து போயுள்ளார்.

  நிஷாவுக்கு கிடைக்க வேண்டியது

  நிஷாவுக்கு கிடைக்க வேண்டியது

  நிஷாவுக்கு கிடைக்க வேண்டிய பிக் பாஸ் டாப்புள் கார்டை சும்மா சீண்டிவிட்டு பறித்துக் கொண்டார் அனிதா சம்பத். தனக்கு கிடைக்க வேண்டிய கார்டு போயிடுச்சு, நாம நாமினேட் ஆனாலும், ரியோவின் ஜால்ரான்னு சொல்லியே நம்மையும் வெளியே அனுப்பிடுவாங்களான்னு உள்ளுக்குள்ள பயந்து நடுங்கும் நிஷா அழுது புலம்ப ஆரம்பித்தார்.

  வாய் கூசாம

  வாய் கூசாம

  அறந்தாங்கி நிஷா அப்படி ஒப்பாரி வைத்து அழுவதற்கு முழு காரணமான நிஷா, கொஞ்சம் கூட வாய்க்கூசாமல், ஏன் அழறீங்க நிஷா, உங்களை யார் அடிச்சது, யார் என்ன சொன்னா, நான் வரேன் கேக்கறதுக்கு என்கிற ரேஞ்சுக்கு பேசியதை கேட்டதும் ஆடியன்ஸ் எல்லாம் அனிதாவின் ஆக்டிங்கை பார்த்து, இவங்க, அர்ச்சனாவையே தூக்கி சாப்பிட்டு விடுவா என சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

  நீ பண்ணது பிடிக்கல

  நீ பண்ணது பிடிக்கல

  உடனே அனிதாவின் மூஞ்சியில் ஓங்கி ஒரு அறை விட்டது போல, நிஷா, நீ பண்ணது எனக்கு கொஞ்சம் கூட சுத்தமா பிடிக்கல என வெளுத்து விட்டார். அதன் பின்னர், உடனே பிக் பாஸ் இந்த டாப்புள் கார்டை நிஷாவுக்கே கொடுத்து விடுங்க என கேமரா முன்னாடி சீன் போட்டு விட்டு கிளம்பி விட்டார். முடிந்த வரை இந்த இருவரையும் சீக்கிரம் வெளியேற்றுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

  English summary
  Anitha Sampath feared to face public in Bigg Boss show. She cunningly got the Bigg Boss Topple card and make Nisha cry.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X