Don't Miss!
- News
முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி.. அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு வாழ்க கோலம்!
- Sports
அடிதூள்.. ஐபிஎல் 2023 தேதிகள் இதுதான்.. ரசிகர்கள் எதிர்பார்க்காத மெகா மாற்றமும் உண்டு.. முழு விவரம்
- Finance
IBM அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 3900 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மனிதர்கள் மிருகங்களை விட மோசமானவர்கள்.. நிவேதா பெத்துராஜின் திடீர் ட்வீட்.. என்ன ஆச்சு?
சென்னை: மனிதர்கள் மிருகங்களை விட மோசமானவர்கள் என நடிகை நிவேதா பெத்துராஜ் திடீரென போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
நடிகை நிவேதா பெத்துராஜுக்கு அப்படி என்ன ஆச்சு? இப்படியொரு ட்வீட் போட்டிருக்காரே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நெட்டிசன்கள் அப்போ நீங்க ஹீயுமன் இல்லையான்னு கலாய்த்தும் வருகின்றனர். மேலும், விலங்கு நல ஆர்வலர்களும் இந்த ட்வீட்டுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
காதலும்
இல்லை..பிரேக்கப்பும்
இல்லை..ஆள
விடுங்கப்பா..தெறித்து
ஓடிய
நிவேதா
தாமஸ்!

ஒரு நாள் கூத்து
நடிகை நிவேதா பெத்துராஜ் கடந்த 2016ல் வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்த அவருக்கு தெலுங்கில் மெண்டல் மதிலோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

ஜெயம் ரவி படத்தில்
டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிகை நிவேதா பெத்துராஜ் விண்வெளி வீராங்கனையாக நடித்து இருந்தார். திமிரு புடிச்சவம் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ், அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுறமுலோ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

லேடி தல
திடீரென கார் ரேஸில் கலந்து கொள்ளும் போட்டோக்களையும் வீடியோக்களையும் நிவேதா பெத்துராஜ் ஷேர் செய்ய ரசிகர்கள் லேடி தல என்றே அன்போடு அழைக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், தற்போது நிவேதா பெத்துராஜ் போட்டுள்ள ட்வீட் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மிருகத்தை விட மோசமானவர்கள்
"Animals >>>>>>>>>>> Human" என தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது நிவேதா பெத்துராஜ் பதிவிட்டுள்ள ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் நிவேதா பெத்துராஜுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி திடீரென பதிவிட்டுள்ளார் என்கிற கேள்விகளை கிளப்பி உள்ளது. சமீபத்தில் தெலுங்கு நடிகர் விஸ்வக் சென் உடன் கிசுகிசுக்கப்பட்டார் நிவேதா பெத்துராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் விவகாரமா
விராட பர்வம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்த நிவேதா பெத்துராஜ் அடுத்ததாக தெலுங்கில் தஸ் கி தம்கி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் நாயகன் விஸ்வக் சென் உடன் நிவேதா பெத்துராஜ் காதலில் விழுந்து விட்டதாக எழுந்த கிசுகிசுக்களுக்கு எதிராக இப்படியொரு ட்வீட் போட்டுள்ளாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நீங்களும் ஹியூமன் தான்
நீங்களும் ஹியூமன் தான் என்றும் மனிதர்கள் மற்றும் மிருகங்களை ஒப்பிட்டு பேசுவது சரியல்ல என்றும் ஏகப்பட்ட நெட்டிசன்கள் நிவேதா பெத்துராஜை ட்ரோல் செய்து திட்டியும் வருகின்றனர். என்ன காரணத்திற்காக நிவேதா இப்படி சொன்னார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் சிலர் ரொம்பவே ஆர்வமாக உள்ளனர்.