»   »  அட நிவின் பாலிக்கு தமிழ் நாட்டில் இவ்வளவு வரவேற்பா!!

அட நிவின் பாலிக்கு தமிழ் நாட்டில் இவ்வளவு வரவேற்பா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாள திரையுலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் நிவின் பாலி ப்ரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நீங்கா இடம் பிடித்துள்ளார். எந்த ஒரு வேற்று மொழி படத்தையும் இந்த அளவு கொண்டாடியதில்லை தமிழ் ரசிகர்கள். குறிப்பாக இளைஞர்கள்.

கடந்த 2015 ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டின் நடிப்பில் வெளிவந்த படம் 'ப்ரேமம்'. ஒருூ மலையாளப் படமாகவே தமிழ் திரையுலகில் பெரும் வெற்றி பெற்றது. ரசிகர்களின் மத்தியில் கனவு நாயகனாக வலம் வருகிறார் நிவின்பாலி.


Nivin Pauli's Richi gets 7 lakh views

இப்போது அவர் 'சகாவு' என்ற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார். தமிழில் 'ரிச்சி' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கௌதம் ராமசந்திரன் இயக்குகிறார். படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.


சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியானது. வெளியான சிலதினங்களிலே 7 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது.

English summary
Nivin Pauly's upcoming film Richie that marks the entry of Nivin 's straight entry into Kollywood. The film's teaser crossed 7 million views in four days, setting a record

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil