»   »  திருடனாக நடிக்க களரிப் பயிற்சி பெறுகிறார் நிவின் பாலி!

திருடனாக நடிக்க களரிப் பயிற்சி பெறுகிறார் நிவின் பாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சின் : ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி, அமலா பால் நடிக்கும் புதிய படம் 'காயம்குளம் கொச்சுண்ணி'. கோகுலம் கோபாலன் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

'காயம்குளம் கொச்சுண்ணி' 19-ம் நூற்றாண்டில் காயம்குளம் பகுதியில் ராபின் ஹூட் போலவே வாழ்ந்த திருடன் ஒருவனைப் பற்றிய படமாகும். அத்திருடன் அப்போது வாழ்ந்த செல்வந்தர்களிடமிருந்து பணம் , பொருள் போன்றவற்றை திருடி நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார்.

Nivin pauly learning kalari martial art

பயங்கர கொள்ளையனான காயம்குளம் கொச்சுண்ணி கேரளா பார்டரை விட்டு தாண்டி வந்து தமிழக எல்லைப்பகுதியில் திருடுவதில் பெயர் போனவன். அவனுடைய வாழ்க்கை வரலாற்றைத்தான் 'காயங்குளம் கொச்சுண்ணி' என்கிற பெயரில் படமாக்கி வருகிறார்.

அதிலும் களரி சண்டையில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பார்களாம். அதனால் இந்த கேரக்டரில் நடிக்கும் நிவின் பாலியும் இந்தப்படத்திற்காக களரிச் சண்டை பயிற்சியெல்லாம் கற்றுக்கொண்டு வருகிறார். இந்த கேரக்டரில் நடிக்கும் நிவின் பாலியும் இந்தப்படத்திற்காக களரிச் சண்டை பயிற்சியெல்லாம் கற்றுக்கொண்டு வருகிறார்.

அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பாபு ஆண்டனியும் நிவின்பாலியுடன் சேர்ந்து கொச்சியில் ரோஷன் ஆண்ட்ரூஸ் நடத்தும் தற்காப்புக் கலைகள் பள்ளியில் களரிப்பயிற்சி எடுத்து வருகிறார். தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக இது உருவாகி வருகிறது.

English summary
Nivin Pauly and Amala Paul are playing the lead roles in Roshan Andrews's 'Kayamkulam Kochunni'. The film about a thief who lived like the Robin Hood in the 19th century in Kayamkulam. Nivin pauly, who plays this character, is learning the 'kalarippayattu' for the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil